அடுத்த அதிரடி! மற்றொரு அதிமுக அமைச்சரை தினகரன் நீக்கம்

Last Updated : Aug 23, 2017, 05:15 PM IST
அடுத்த அதிரடி! மற்றொரு அதிமுக அமைச்சரை தினகரன் நீக்கம் title=

அதிமுக அம்மா பேரவை பொறுப்பில் இருந்து சிலரை தினகரன் அதிரடியாக நீக்கி வருண் தினகரன் தற்போது  கரூர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

 

 

அதோடு கரூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இன்று காலை ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.பி.உதயகுமார் நீக்கி அவருக்கு பதிலாக மாரியப்பன் கென்னடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் விருதுநகர் மாவட்டம் பொருளாளர் பொறுப்பிலிருந்து அழகர்சாமி நீக்கம்.

நேற்று அதிமுக அம்மா பேரவை அணியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து வைத்திலிங்கத்தை நீக்கியாதாக டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். 

கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு எதிராக நடந்து கொண்டதால் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வைத்திலிங்கம் நீக்கப்படுவதாக தெரிவித்தார்.

Trending News