எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் டிடிவி, ஸ்டாலின் பெயர்!

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி தினகரன் பெயர் இடம்பெற்றுள்ளது. 

Last Updated : Sep 24, 2018, 11:55 AM IST
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் டிடிவி, ஸ்டாலின் பெயர்! title=

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி தினகரன் பெயர் இடம்பெற்றுள்ளது. 

சென்னையில் வரும் 30-ம் தேதி நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழா அழைப்பிதழில் மு.க.ஸ்டாலின், மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. 

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மதுரையில் தொடங்கி பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டங்கள் இறுதியாக சென்னையில் வரும் 30-ம் தேதி நிறைவடைய உள்ளன. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் வெளியாகி இருக்கின்றன. 

இந்நிலையில் இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழ் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன்  உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது.

Trending News