ஆளுநருடன் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் சந்திப்பு!

தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் திரு. கென்னத் ஐ ஜஸ்டர் அவர்கள் இன்று (13.2.2018) சென்னை ராஜ்பவனில் சந்தித்தார்.

Updated: Feb 13, 2018, 07:08 PM IST
ஆளுநருடன் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர்  சந்திப்பு!

தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் திரு. கென்னத் ஐ ஜஸ்டர் அவர்கள் இன்று (13.2.2018) சென்னை ராஜ்பவனில் சந்தித்தார்.

இருதரப்பிலும் சம்பிரதாய மரியாதைகள் அளிக்கப்பட்டது. மரியாதைக்குப்பின் நடந்த சந்திப்பில் அமெரிக்க தூதர் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள உறவை வலுப்படுத்த ஆர்வம் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் முதலீடுகளை அதிகப்படுத்துவதற்கான வளங்களை ஆராய்ந்து வருவதாகவும் ஆளுநரிடம் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் அமெரிக்க தூதரிடம் தெரிவிக்கும்போது, தொழில்நுட்பம், மனித வளம், அடிப்படை கட்டமைப்பு மற்றும் துறைமுக வசதிகள் தமிழ்நாட்டில் உள்ளதென்றும், அமெரிக்க தூதரின் சந்திப்பு அதிக முதலீட்டிற்கும், கலாச்சார பரிமாற்றத்திற்கும் உதவுமென்றார். மேலும் தமிழகத்தில் தொழில் மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வெளிப்படைத் தன்மையுடன் செய்துதரப்படும் என்று ஆளுநர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் அதிகாரி திரு. ராபர்ட் பர்கஸ் மற்றும் ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ஆர். ராஜகோபால், இ.ஆ.ப. அவர்களும் உடனிருந்தனர்.