கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

வெப்பசலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பொழிந்த திடீர் கனமழை காரணாமக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2018, 01:23 PM IST
கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு! title=

வெப்பசலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பொழிந்த திடீர் கனமழை காரணாமக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது!

தென் மேற்கு பருவமழை ஓய்ந்த நிலையில், கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததுள்ளது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்தது.

இந்நிலையில், குற்றால அருவிகளின் நீராதாரமான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், வியாழக்கிழமை கனமழை கொட்டித்தீர்த்தது. இதனைத் தொடர்ந்து குற்றாலத்தில், ஐந்தருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 

இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாங் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. முன்னதாக பருவ மழையின் போது பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் பரிசல்களை இயக்கவும் தடைவிதிக்கப்பட்டது. பருவமழையால் குற்றால வியாபாரிகள் பெரும் நட்டத்தை சந்தித்த நிலையில் தற்போது குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையல் குற்றால வியாபாரிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News