எங்கெங்கே ஐடி ரெய்டு- ஒரு பார்வை!!

Updated: Nov 9, 2017, 08:52 AM IST
எங்கெங்கே ஐடி ரெய்டு- ஒரு பார்வை!!

ஜெயலலிதா ஓய்வெடுக்கும் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் பங்களாவிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினகரன் வீடு, இளவரசியின் மகன் விவேக் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டி.வி. பழைய அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் வேளச்சேரி பீனிஸ்க் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ், பெங்களூருவில் அதிமுக அம்மா அணி அதிமுக செயலாளர் புகழேந்தி வீடு, மன்னார்குடி திவாகரன் வீடு, சசிகலா பரோலில் வரும் போது தங்கியிருந்த திநகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீடு, திருவாரூர் அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளர் காமராஜ், திருவாரூர் கீழதிருப்பாலங்குடியில் உள்ள திவாகரன் உதவியாளர் விநாயகம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.