ஆதார் விவரங்களை ஆன்லைனில் மாற்ற 6 எளிய வழிகள்!

ஆதார் அட்டையில் உள்ள முகவரியினை எவ்வாறு மாற்றலாம் என்பதினை எளிய முறையில் தெரிந்துக்கொள்வோம்!

Updated: Mar 8, 2018, 01:07 PM IST
ஆதார் விவரங்களை ஆன்லைனில் மாற்ற 6 எளிய வழிகள்!
Representational Image

ஆதார் அட்டையில் உள்ள முகவரியினை எவ்வாறு மாற்றலாம் என்பதினை எளிய முறையில் தெரிந்துக்கொள்வோம்!

தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.

ஆதார் அட்டை விவரங்களை அனுகுதல் என்பது ஆன்லைன் முறைபடுத்தப் பட்டாலும் இன்றளவும் அந்த செயல்பாடுகளில் சாமானியர்கள் தத்தளித்து தான் வருகின்றனர். இதை எவ்வாறு எளிமையாக்குவது? 

ஆதார் அட்டையில் உள்ள முகவரி தவராக இருந்தால் அதை எவ்வாறு எளிமையாக மாற்றுவது...

 • படி 1 - https://uidai.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.
 • படி 2 - பின்னர் வரும் பக்கத்தினில் Address Update Request (Online) என்ற இணைப்பினை கிளிக் செய்யவும். அடுத்துவரும் பக்கத்தினில் நிபந்தனை விதிகளை படித்துவிட்டு கீழே இருக்கும் டிக் குறியினை கிளிக் செய்து Proceed பொத்தானை கிளிக் செய்யவும்.
 • படி 3 - உங்களது கைபேசி எண்னை உள்ளிடுமாறு கேட்கும், உள்ளிடவும். பின்னர் உங்கள் கைபேசிக்கு OTP ஒன்று அனுப்பி வைக்கப்படும் அதனை கொண்டு உங்கள் கணக்கினை உறுதி படுத்தவும்.
 • படி 4 - அடுத்து வரும் பக்கத்தினில் இருங்கும் முகவரியினை, மாற்றி உங்கள் சரியான முகவரியினை உள்ளிடவும். 
 • படி 5 - பின்னர் Submit பொத்தானை கிளிக் செய்யவும்.
 • படி 6 - தங்கள் முகவரியினை உறுதிபடுத்த அராசங்க அட்டைகள் ஏதேனும் ஒன்று (வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், கைபேசி இணைப்பு பில்) சமர்பித்தல் அவசியம். ஏதேனும் ஒன்றின் விவரத்தினை உள்ளிட்டு உங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தினை தேர்வு செய்துவிட்டு மீண்டும் Sunmit பொத்தானை கிளிக் செய்யவும்.

அவ்வளது தான் 6 படிகளில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியினை மாற்றிவிடலாம்.

அதேவேலையில் ஆதாரின் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் முக்கிய காரணியாகும்.

இந்நிலையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை எப்படி சரிபார்க்கலாம்?

பின்வரும் முறையை பின்தொடர்ந்தாள் போதும்:-

 • https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்
 • பக்கத்தின் வலது பக்கம் நீல நிற தவழ ஒன்று காணப்படும், அதில் “Verify Email/Mobile Number” -என்பதை தேர்வு செய்க.
 • அந்த போத்தனை கிளிக் செய்தவுடன் மற்றொரு தாவல் பக்கம் திறக்கப்படும், அதில் "OK" வை கிளிக் செய்யவும்.
 • பின்னர் மற்றொரு பக்கம் திறக்கப்படும், அதில் தேவையான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
 • உடனடி ஒருமுறை கடவுசொல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
 • அனுப்பப்பட்ட கடவுசொல்லை இந்த பக்கத்தில் உள்ளிடவும். நீங்கள் உள்ளிட்ட மின்னஞ்சல் உங்கள் ஆதார் தகவலுடன் பொருந்தினால் "Congratulations! The Email ID matches with our records!" எனும் செய்தி உங்களுக்கு காண்பிக்கப்படும். 

இதே முறையை பயன்படுத்தி உங்களது மொபைல் எண்ணையும் சரிபார்க்க முடியும்.