இஸ்ரோ வரலாற்றில் முக்கிய திருப்பு முனை - விண்ணுக்கு மனிதனை அனுப்ப திட்டம்

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ இலக்கு வைத்துள்ளது என்று கே.சிவன் தெரிவித்துள்ளார்.

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Jan 11, 2019, 03:29 PM IST
இஸ்ரோ வரலாற்றில் முக்கிய திருப்பு முனை - விண்ணுக்கு மனிதனை அனுப்ப திட்டம்
File photo

பெங்களூருரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியாதவது: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ இலக்கு நிர்ணியத்துள்ளது. இதற்க்கான முயற்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரோவின் வரலாற்றில் இந்த பயணங்கள் ஒரு முக்கிய திருப்பு முனையாகும். 

முதலில் டிசம்பர் 2020 மற்றும் ஜூலை 2021 ஆகிய காலங்களில் இரண்டு ஆளில்லாத ஏவுகணைகள் அனுப்பப்படும். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ இலக்கு வைத்துள்ளது. இதற்க்காக ரூ.173 கோடியில் திட்டம்.

தற்போது ககன்யான் திட்டத்திற்கான தயார் நிலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்திற்கான முதற்கட்ட பயிற்சி இந்தியாவிலும், மேம்பட்ட பயிற்சி ரஷ்யாவிலும் நடைபெறும். இந்த குழுவில் பெண் விண்வெளி வீராங்கனைகளும் இடம் பெறுவார்கள். இதற்காக நாடு முழுவதும் ஆறு ஆராய்ச்சி மையங்கள் அமைக்க உள்ளோம். இதன்மூலம் இந்திய மாணவர்களுக்கு இஸ்ரோவில் வேலை வாய்ப்பு வழங்குவோம். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் நாசாவிற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்ப்படாது.

அதேவேளையில், இந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்தியாவின் இரண்டாவது நிலவு திட்டமான சந்திரயான் -2 அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என சிவன் தெரிவித்தார். இந்த ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி 16 வரை சந்திரயான் -2 பற்றிய கணிப்பு துவங்கப்படும் என்று கூறியுள்ளார். அதன்பின்னர் மார்ச் 25 முதல் ஏப்ரல் மாதம் வரை முடிவு செய்யப்பட்டது சந்திரயான் -2 எப்பொழுது ஏவப்படும் என்று" இவ்வாறு  இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.