Instagram and Snapchat செயலிகளில் இனி இந்த அம்சம் இல்லை!

தற்போதைய டிரென்ட் சமூக வலைத்தளங்களில் இன்று தான் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட். இந்த இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் செயலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த (GIF) அம்சம் நீக்கப்பட்டு இருக்கிறது. 

Last Updated : Mar 11, 2018, 02:46 PM IST
Instagram and Snapchat செயலிகளில் இனி இந்த அம்சம் இல்லை! title=

தற்போதைய டிரென்ட் சமூக வலைத்தளங்களில் இன்று தான் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட். இந்த இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் செயலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த (GIF) அம்சம் நீக்கப்பட்டு இருக்கிறது. 

வாடிக்கையாளர்கள் பதிவிடும் புகைப்படங்களுக்கு இனவெறியை தூண்டும் வகையிலான (GIF) இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த அம்சம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதேபோன்ற (GIF) பேஸ்புக் செயலியிலும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்த விசாரணை நிறைவுறும் வரை (GIF)-யுடனான எங்களது கூட்டணியை நிறுத்திக் கொள்கிறோம் என இன்ஸ்டாகிராம் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரிமாற்றத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தும் அனிமேஷன் (GIF) இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் செயலிகளில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது அதன் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Trending News