ரூ.149-க்கு ஜியோ-வின் Unlimited Data திட்டம்!

Last Updated : Oct 10, 2017, 01:26 PM IST
ரூ.149-க்கு ஜியோ-வின் Unlimited Data திட்டம்! title=

டெலிகாம் நிறுவனுங்கள் அனைத்தும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு புதுத்திட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான திட்டம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி ரூ.149-க்கு வரம்பற்ற டேட்டா திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது!

இத்திட்டத்தின்படி ரூ.149 செலுத்தினால் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் கீழ், 2 GB டேட்டாவினை 4G வேகத்திலும் அதன்பின் 64kbps வேகத்திலும் வரம்பற்ற டேட்டாவினை பெறலாம்.

மேலும் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு, 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகள் ஆகியவற்றை 28 நாட்களுக்கு அனுபவிக்கலாம்.

பழைய கட்டணத் திட்டத்தில், வழங்கப்பட்ட தரவு காலாவதியாகி பின்னர், வாடிக்கையாளர்கள் புதிய இணைய சேவைகளை அனுபவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News