மைக்ரோசாப்ட் பெயின்ட் விரைவில் நிறுத்தம்

Last Updated : Jul 25, 2017, 02:38 PM IST
மைக்ரோசாப்ட் பெயின்ட் விரைவில் நிறுத்தம் title=

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முன்னோடி சேவையான பெயின்ட் பயன்பாட்டை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

3-டி வரைபட மென்பொருளில் கவனம் செலுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1985-ம் ஆண்டு விண்டோஸ் இயங்கு பொருளின் அங்கமான பெயின்ட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக விண்டோஸ் கணினிகளில் கட்டாயம் நிறுவப்படும் சேவைகளில் பெயின்ட் ஒன்றாக இருந்தது.

இந்நிலையில் பெயின்ட் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்கள் இனி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பெயின்ட் 3-டி சேவையே பயன்படுத்த முடியும்.

Trending News