இந்தியாவில் வெளியானது Moto G6 Plus; விலை Rs.22,499 மட்டும்!

பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான Motorola தனது புதுவரவான Moto G6 Plus-னை இந்தியாவில் அறிமுகம் செய்துளது!

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Sep 10, 2018, 05:21 PM IST
இந்தியாவில் வெளியானது Moto G6 Plus; விலை Rs.22,499 மட்டும்!

பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான Motorola தனது புதுவரவான Moto G6 Plus-னை இந்தியாவில் அறிமுகம் செய்துளது!

தனது நீடித்த பேட்டரி திறனால், ஸ்மார்போன் உலகில் தனக்கென ஒரு தனி இடத்தினை பிடித்த மோட்டரோலா நிறுவனம் தனது புதிய வரவான Moto G6 Plus-னை இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு இறக்குகிறது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பிரேசிலின் சோ பவுளே-வில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் Moto G6, Moto G6 Plus, Moto G6 Play போன்ற புத மொபைல்களை அறிமுகம் செய்ததன் மூலம் Moto G வரிசை மொபைல்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது. எனினும் Moto G6 Plus-னை இந்தியாவில் அறிமுகம் இந்நிறுவனம் செய்யவில்லை.

இந்நிலையில் உலகலாவிய சந்தையில் வெளியாகி 5 மாதங்களுக்கு பிறகு தற்போது இந்தியாவில் இந்த Moto G6 Plus அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை Rs. 22,499 என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இன்றைய தினம் முதல் அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களிலும், ஆப்லைன் விற்பனை கூடங்களிலும் இந்த போன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Moto G6 Plus பற்றி சில தகவல்கள்...

  • 5.9" IPS தொடுதிரை
  • கோர்ணிங் கொரிலா கண்ணாடி 3-ஆம் பதிப்பு
  • Qualcomm Snapdragon 630 செயல்தளம் மற்றும் 2.2 GHz octa-core CPU
  • 700 MHz Adreno 508 GPU
  • 12 MP + 5 MP பின்கேமிரா
  • 8 MP முன் கேமிரா
  • 3200mAh மின்கலன்
  • Android 8.0 Oreo இயங்குதளம்
  • 64 GB உள் நினைவகம்
  • 4 GB/6 GB RAM

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close