டெபிட் கார்டு, பீம் செயலி பரிவர்த்தனைகளுக்கு offer!

டெபிட் கார்டு, பீம் செயலி மூலம் ரூ.2,000 வரை பொருள்களை வாங்கினால் அதற்கு கட்டணமும் செலுத்த வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Updated: Jan 2, 2018, 11:40 AM IST
டெபிட் கார்டு, பீம் செயலி பரிவர்த்தனைகளுக்கு offer!

டெபிட் கார்டு, பீம் செயலி வாயிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி, டெபிட் கார்டு, பீம் செயலி வாயிலாக நடைபெறும் 2000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசே செலுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், இந்த சலுகை திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி 2000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை அரசு இரண்டு ஆண்டுகளுக்கு செலுத்தும். பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்மூலம் அரசுக்கு ரூ.2,512 கோடி இழப்பு ஏற்படும் என்று நிதிச் சேவைகள் செயலாளர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.