பானசோனிக் ஸ்மார்ட்போன் வாங்கினால் தங்கம் வெல்லலாம்!!

இந்தியாவில் பானசோனிக் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பி100 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Updated: Feb 9, 2018, 08:05 AM IST
பானசோனிக் ஸ்மார்ட்போன் வாங்கினால் தங்கம் வெல்லலாம்!!
Zee Media

இந்தியாவில் பானசோனிக் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பி100 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீலம், தங்கம் மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கும். இந்த பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போன் நல்ல அம்சங்கள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போன் 1ஜிபி மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டது. ஸ்கிரின் 5.0 இன்ச் கொண்டது. கைரேகை ஸ்கேனர் அம்சமும் கொடுக்கப்பட்டு உள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனனை வாங்கும் வாடிக்கையாளர் 10 கிராம் தங்கம் வெல்லும் வாய்ப்பையும் பானாசோனிக் நிறுவனம் வழங்கியுள்ளது.

பானசோனிக் P100 சிறப்பம்சங்கள் பின்வருமாறு:-

1 ஜிபி /2 ஜிபி ரேம் & 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
8 எம்பி பிரைமரி கேமரா & 5 எம்பி செல்ஃபி கேமரா (எல்இடி பிளாஷ்)
5.0 இன்ச் கொண்ட ஹெச்.டி. டிஸ்ப்ளே 
கைரேகை சென்சார்
2200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
கார்னிங் கொரில்லா கிளாஸ்

இந்தியாவில் இதன் விலை 1 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.5,299 மற்றும் 2 ஜிபி ரேம் மாடல் ரூ.5,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close