இன்ஸ்டாகிராமில் உங்கள் சுயவிவரத்தைப் பாதுகாக்க சில டிப்ஸ்!!

இன்ஸ்டாகிராமில் உள்ள தனியுரிமை அமைப்புகள் மூலம் அடையாளம் தெரியாத நபர்களின்திருட்டுகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள சில வழிமுறைகள். 

Updated: Feb 11, 2018, 04:12 PM IST
இன்ஸ்டாகிராமில் உங்கள் சுயவிவரத்தைப் பாதுகாக்க சில டிப்ஸ்!!
ZeeNewsTamil

ஹேக்கர்களிடம் இருந்து நமது இன்ஸ்டாகிராமில் உள்ள சுயவிவரத்தை அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து நம்மை தற்காத்து கொள்ள சில வழிகளை தெரிந்து கொள்வோம்.

இன்ஸ்டாகிராமை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் வகையில், கிராஃபிக்ஸ் உள்ளடக்கங்களைக் கொண்ட குறிப்பிட்ட இடுகைகளுக்கு, கூடுதல் கணக்கு பாதுகாப்பு மற்றும் உணர்ச்சிபூர்வமான உள்ளடக்க திரைகள் ஆகியவற்றை இந்நிறுவனம் சேர்த்துள்ளது.

இரண்டு காரணி அங்கீகாரம் மிகவும் பாதுகாப்பான முறைகளில் அங்கீகாரம் வழங்குவதில் இதுவும் ஒன்றாகும். இதன்படி அடையாளம் தெரியாத புதிய சாதனங்களில் இருந்து இன்ஸ்டாகிராமிற்குள் நுழைய முயற்சிக்கும் போது, உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை தவிர, கூடுதலாக ஒரு பாதுகாப்பு குறியீட்டையும் கேட்கும். அதை பெற்ற பிறகே, உள்நுழைய முடியும்.

> உங்கள் சுயவிவரத்திற்கு சென்று, மேலே வலது முனையில் கிளிக் செய்யுங்கள்.  

> இப்போது இரண்டு காரணி அங்கீகாரத்தைக் காணும் வரை, கீழ் நோக்கி உருட்டவும்

> பாதுகாப்பு குறியீடு தேவை என்ற மாற்றை ஆன் செய்ய தட்டவும் உங்கள் ஃபோன் நம்பரை இதுவரை பதிவு செய்யாமல் இருக்கும்பட்சத்தில், அதை முதலில் செய்ய வேண்டும். அப்போது உங்களுக்கு தேவையான குறியீடை பெறலாம். அந்த குறியீட்டை உள்ளிட்டு, அடுத்தது என்பதை தட்டவும். 

இந்த முறையை அணைக்க வேண்டுமானால்,

> உங்கள் சுயவிவரத்திற்கு சென்று, மேலே வலது முனையைத் கிளிக் செய்யுங்கள்.

> இப்போது இரண்டு காரணி அங்கீகாரம் என்பதை காணும் வரை கீழ் நோக்கி உருட்டவும். 

> பாதுகாப்பு குறியீடு தேவை என்ற மாற்றை ஆப் செய்ய தட்டவும்

இந்த இரண்டு காரணி அங்கீகாரம் ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தால், அடையாளம் தெரியாத சாதனங்களில் எப்போதெல்லாம் உள்நுழைய முயன்றாலும், ஏற்கனவே நாங்கள் குறிப்பிட்டது போல, ஒரு காப்பு குறியீடு அல்லது ஒரு எஸ்எம்எஸ் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடுமாறு கேட்கும். 

இணைப்பு பிரச்சனைகளால் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் கிடைக்கவில்லை என்றாலும், காப்பு குறியீட்டை பயன்படுத்தி உள்நுழைய முடியும். 

காப்பு குறியீட்டை பெற பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும். 

> உங்கள் சுயவிவரத்திற்கு சென்று, மேலே வலது முனையில் கிளிக் செய்யுங்கள்.

> இப்போது இரண்டு காரணி அங்கீகாரம் என்பதை காணும் வரை, கீழ் நோக்கி உருட்டவும். 

> காப்பு குறியீட்டை பெறுதல் என்பதை தட்டவும்.