ரயில்வே துறையில் வழக்கத்தில் இருந்த 'ஐ-டிக்கெட்' சேவை நிறுத்தம்!

இந்திய ரயில்வே துறையின் செயல்பாட்டில் இருந்த 'ஐ-டிக்கெட்' சேவையை முறையை இந்த மாதம் முதல் நிறுத்தம்! 

Updated: Mar 13, 2018, 01:14 PM IST
ரயில்வே துறையில் வழக்கத்தில் இருந்த 'ஐ-டிக்கெட்' சேவை நிறுத்தம்!
ZeeNewsTamil

இந்திய ரயில்வே துறையில் (I.M.C.D.C)  கடந்த 16 வருடமாக நடைமுறையில் இருந்து வந்த ஐ-டிக்கெட் என்ற முன்பதிவு சேவையை நிறுத்தியது. 

கடந்த 2002ம் ஆண்டு  இந்திய ரயில்வே துறை (ஐ.ஆர்.சி.டி.சி)  ஐ-டிக்கெட் என்ற டிக்கெட் முன்பதிவு சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த முறை மூலம் வசதிகள் இல்லா இடங்களில் வசிப்பவர்கள்,  வயதானவர்கள், வெளியூர் வாசிகள், உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோர் இந்த சேவை மூலம் வெப்சைட்டில் தங்களுக்கு தேவையான டிக்கெட்டை தனது வசிப்பிட முகவரியை கொண்டு முன்பதிவு செய்தால். அவர்களது டிக்கெட் தபால் மூலம் அவர்களின் இருப்பிடத்திற்கே வந்து சேரும். 

இந்த ஆன்லைன் முன்பதிவானது ஹைதெராபாத், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, மதுரை, சென்னை, மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு பயணம் செய்தால் 2 நாட்களுக்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும். 

இந்த குறிப்பிட்ட இடங்களை தவிர மற்ற நகரங்களுக்கு செல்வதாக இருந்தால் 3 நாள் முன்பே முன்பதிவு செய்வது முக்கியம் என்றிருந்த நிலையில், தற்போது  இந்திய ரயில்வே துறையானது 'ஐ-டிக்கெட்' சேவையை கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.