2017-ல் வெளியான டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒரு பார்வை!

இந்த ஆண்டு வெளிவந்த டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம். 

Updated: Dec 30, 2017, 06:29 PM IST
2017-ல் வெளியான டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒரு பார்வை!

ஸ்மார்ட்போன் என்பது அனைவரின் கவனத்தையும் கவர்ந்த ஒன்று. தற்போது இருக்கின்ற கால கட்டத்தில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் உலாவி வருகிறது. 

ஆண்டு இறுதியில் பல்வேறு தள்ளுபடி மற்றும் சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு வெளியிடப்பட்டதில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பார்ப்போம். 

சியோமி மி ஏ1:

இந்தியாவில் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படும் சியோமி Mi A1 ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா, கூகுள் ஸ்டாக் ஆண்ட்ராய்டு உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இத்துடன் Mi A1 ஸ்மார்ட்போனின் சிவப்பு நிற பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.14,999 விலையில் வெளியிடப்பட்டாலும், சமீபத்தில் இதன் விலையில் ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு: 

- 5.5 இன்ச் ஃபுல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே 

- கார்னிங் கொரில்லா கிளாஸ்

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டாகோர் பிராசஸர்

- 4 ஜிபி ரேம்

- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- 12 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா

- 5 எம்பி செல்ஃபி கேமரா

- Mi Ui சார்ந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.1

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3080 எம்ஏஎச் பேட்டரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- கைரேகை ஸ்கேனர் 

ஹானர் 7X:

இந்தியாவில் ரூ.12,999 முதல் துவங்கும் ஹானர் 7X ஸ்மார்ட்போனில் 18:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், டூயல் லென்ஸ் பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ள ஹானர் 7X ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

சிறப்பு:

- 5.93 இன்ச் ஃபுல் எச்டி, 1080x2160 பிக்சல் வளைந்த டிஸ்ப்ளே

- ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 3659 பிராசஸர்

- 4 ஜிபி ரேம்

- 32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 16 எம்பி + 16 எம்பி பிரைமரி கேமரா

- 8 எம்பி செல்ஃபி கேமரா

- 3340 எம்ஏஎச் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 4:

சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் கொண்ட மாடல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதிகளவு விற்பனையை தொடர்ந்து தற்சமயம் 3ஜிபி மற்றும் 4ஜிபி மாடல்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பு:

- 5.5 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் எல்சிடி டிஸ்ப்ளே

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் 

- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்

- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- 13 எம்பி பிரைமரி கேமரா

- 5 எம்பி செல்ஃபி கேமரா

- டூயல் சிம் ஸ்லாட் 

- ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ சார்ந்த MIUI 8

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 4100 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ ஜி5எஸ் பிளஸ்:

மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனிலும் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் லூனார் கிரே மற்றும் பிளஷ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.16,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பு:

- 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே

- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625

- 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

- 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்

- 13 + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா  

- 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் 

- 4ஜி எல்டிஇ, ப்ளூடூத்

- ஜிபிஎஸ், வைபை

- 3.5 எம்எம் ஆடியோஜாக்

- 3000 எம்ஏஎச் பேட்டரி

- டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

லெனோவோ K8 நோட்:

இரண்டு வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் லெனோவோ K8 நோட் ஸ்மார்ட்போன் விலை ரூ.11,999 முதல் துவங்குகிறது. பின்புறம் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ள லெனோவோ K8 நோட் ஸ்மார்ட்போன் 0.3 நொடிகளில் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும் வசதியை கொண்டுள்ளது. 

சிறப்பு:

- 5.5 இன்ச், 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே

- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ X23 பிராசஸர்

- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்

- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- 13 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா

- 13 எம்பி செல்ஃபி கேமரா

- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

- 4000 எம்ஏஎச் பேட்டரி

- டர்போ சார்ஜ் 

- டூயல் சிம் ஸ்லாட்

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close