இன்னும் சில நாட்களில் வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தலாம்!!

வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் விரைவில் பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Updated: Feb 8, 2018, 07:17 PM IST
இன்னும் சில நாட்களில் வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தலாம்!!
Zee News Tamil

வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. அதுவும் பேஸ்புக் கைப்பற்றிய பிறகு வாட்ஸ்அப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில், வாட்ஸ் அப் மூலம் பணம் செலுத்தம் வசதி இன்னும் சில நாட்களில் வாட்ஸ்அப் செயலியில் இந்த அம்சம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இறுதிகட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

இந்த வசதி வந்த பிறகு வாட்ஸ்அப் பயனாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இதன் மூலம் இனி நாம் பண பரிவரத்தனை செய்யலாம். 

ஏற்கனவே பல வசதிகள் கொண்டு இருக்கும் வாட்ஸ் அப். இந்த வசதி இன்னும் சில வாரங்களில் வந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.