அதிர்ச்சி: iPhone வெடிக்காதுனு யாருங்க சொன்னது!

சுவிட்சர்லாந்தில் ஐபோன் பேட்டரி வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்!

Updated: Jan 10, 2018, 01:42 PM IST
அதிர்ச்சி: iPhone வெடிக்காதுனு யாருங்க சொன்னது!
Pic Courtesy: /support.apple.com

சூரிச்: சுவிட்சர்லாந்தில் ஐபோன் பேட்டரி வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்!

சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் ஐபோன் கடை ஒன்றில் பழுதுபார்க வந்த ஆப்பில் நிறுவன ஐபோன் ஒன்றின் பேட்டரி வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயத்துடன் உயிர் தப்பினார்.

www.swissinfo.ch செய்தியின்படி, இந்த சம்பவம் செவ்வாயன்று சூரிச்சின் பஹொப்பஸடர்ஸ் பகுதி ஆப்பிள் ஸ்டோரில் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சூரிச் நகர காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், வாடிக்கையாளர் ஒருவர் பழுதான தனது ஐபோனினை பழுது பார்க எடுத்துவந்துள்ளார். பழுதுபார்கையில் அந்த போன் திடிரென வெடித்தது. இதனால் பழுது பார்த்தவரின் கை ஏறக்குறைய முழுவதுமாகவே எரிந்தது, மேலும் இச்சம்பவம் நிகழ்கையில் அந்த கடையில் சுமார் 50 பேர் இருந்தனர்" என தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எனினும் ஆப்பிள் நிறுவனம் இச்சம்பவம் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.