தீபக் மிஸ்ரா விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மீண்டும் வழக்கு!

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக மீண்டும் வழக்கு தொடர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

Last Updated : Apr 24, 2018, 06:41 AM IST
தீபக் மிஸ்ரா விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மீண்டும் வழக்கு! title=

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி நீக்கம் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் கொடுத்த தீர்மானத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார். ‘தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கக் கூடியதாகவோ அல்லது ஏற்கக் கூடியதாகவோ இல்லை’  என்று தனது உத்தரவில் அவர் கூறியுள்ளார். 

வெங்கையாவின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது பற்றி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  முடிவு செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான, வெங்கையா நாயுடுவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.

இதையடுத்து, வெங்கையா நாயுடு நேற்று டெல்லியில் தீபக் மிஸ்ராவி பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனையின் முடிவில்...!

இந்த பதவி நீக்க தீர்மானத்தை கொடுத்துள்ள எம்பி.க்களுக்கே, அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் உறுதியாக இல்லை. அவர்களே இந்த  குற்றச்சாட்டுகளை யூகத்தின் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளனர். 

இது குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கக் கூடியதாக இல்லை. என்று கூறி மனுவை நிராகரித்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிது வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்...!

இது நிராகரிப்பு ஜனநாயகத்துக்கும், குரல் மீட்பு ஜனநாயகத்துக்கும் இடையிலான போராட்டம் என ‘டுவிட்டர்’ தளத்தில் வர்ணித்து இருந்தார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அளித்த பதவிநீக்க நோட்டீசின் தகுதி குறித்து தீர்மானிக்க மாநிலங்களவை தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய அவர், இது தொடர்பாக கிருஷ்ண சுவாமியின் வழக்கை சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் வெங்கையா நாயுடு கூறுவது போல, தீபக் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு முன்பே நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Trending News