ரசிகர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிய சச்சின்: Viral Video!!

மும்பை நகரின் தெருவில், நள்ளிரவில் இளைஞர்களுடன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. 

Updated: Apr 17, 2018, 03:36 PM IST
ரசிகர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிய சச்சின்: Viral Video!!
Image: Video Grab

உலக கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர், தனது பேட்டிங் மூலம் பந்து விச்சாளரை பயமுறுத்தக் கூடியவர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

அவருக்கு, உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், மெக்ராத் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களில் பந்துகளில் விளையாடியவர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகிவிட்ட அவர், தற்போது மும்பை அணியின் சப்போட்டராக இருந்து வருகிறார்.

இவர் மும்பையில் சில இளைஞர்களுடன் நள்ளிரவில், கிரிக்கெட் விளையாடும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

44 வயதாகும் சச்சின் மும்பை இந்தியன் கேப்டனாக இருந்தார். 91 பிரிமியர் லீக் போட்டிகளில் மொத்தம் 2,559 ரன்கள் குவித்தார். 

இந்த காலகட்டத்தில் அவர் ஒரு சதம் மற்றும் 14 அரை சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close