117 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்த குமாரசாமி

ஆளுநரை சந்தித்து ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் கடிதத்தை அளித்தார் ஜேடிஸ் குமாரசாமி.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: May 16, 2018, 05:56 PM IST
117 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்த குமாரசாமி
Pic Courtesy : ANI

கர்நாடகா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்தல் முடிவுகளில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி(113 தொகுதிகள்) எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. 

இதனிடையே தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே அவசரம் அவசரமாக காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆளுநரிடம் நேற்று கடிதத்தினை அளித்தது. ஆனால் ஆளுநர் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார். 

இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க தங்களை அழைக்குமாறு பா.ஜ.க-வின் சட்டமன்ற உறுப்பினர் எடியூரப்பா கடிதம் அளித்துள்ளார். இந்நிலையில், இன்று மாலை ஆளுநரை சந்திக்க மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் நேரம் கேட்டு இருந்தனர். ஒருவேளை ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை என்றால், தர்ணா போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் மற்றும் ஜேடிஸ் கட்சிகள் திட்டமிட்டிருந்தனர். தற்போது ஜேடிஸ் உறுப்பினர் ஆளுநரை சந்தித்து வருகின்றனர்.

ஆளுநரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி கூறியாதவது:-

தங்கள் ஆதரவு 117 எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். சட்ட வல்லுனர்களை ஆலோசித்து பின்னர் முடிவு தெரிவிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். சட்டத்துக்கு உட்பட்டு சரியான முடிவை எடுப்பேன் என ஆளுநர் உறுதி அளித்துள்ளார். மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிகிறது. அனைத்து எம்.எல்.ஏ-க்கலும் எங்களிடம் உள்ளனர் எனக் கூறினார்.

 

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close