அமெரிக்கா டெக்சாஸில் துப்பாக்கிச்சூடு: 8 பலி

Updated: Sep 11, 2017, 10:34 AM IST
அமெரிக்கா டெக்சாஸில் துப்பாக்கிச்சூடு: 8 பலி

அமெரிக்காவில் உள்ள வடக்கு டெக்சாஸ் நகரில் பிளானோ பகுதியில் ஒரு வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு, போலீஸ் அதிகாரி ஒருவர் உள்ளே சென்று பார்த்துள்ளார். 

அப்போது அங்கு பதுங்கி இருந்த நபர், போலீஸ் அதிகாரி மீதும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளார். அந்த போலீஸ் அதிகாரி சுட்டதில், கொலையாளி பலியாகி உள்ளான். 

ஏற்கனவே அந்த கொலையாளி சுட்டதில் 7 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவத்தில் கொலையாளியுடன் சேர்த்து மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 2 பேர் காயங்களுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.