ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகும் மசோதா - ராணி எலிசபெத் ஒப்புதல்

Updated: Mar 17, 2017, 05:10 PM IST
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகும் மசோதா - ராணி எலிசபெத் ஒப்புதல்
Zee Media Bureau

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து விலகுவகு தொடர்பாக கடந்த ஆண்டு நடைத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஒப்புதல் பெறுவதற்கான சட்ட மசோதா பிரிட்டன் நாடாளுமன்றம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக 335 எம்.பி.க்களும், ஆதரவாக 287 எம்.பி.க்களும் வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில், மக்களின் கருத்துப்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் கடந்த 14-ம் தேதி ஒப்புதல் அளித்தது. 

அதனைத்தொடர்ந்து, இந்த மசோதா இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் ஒப்புதலை பெற அனுப்பி வைக்கப்பட்டது. ராணி எலிசபத் இந்த மசோதாவுக்கு கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார். இதனைத்தொடர்ந்து, பிரெக்ஸிட் மசோதா முழு சட்ட வடிவம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.