பழிவாங்கும் என்னத்தில் சொந்த தாயை கொன்ற 10 வயது சிறுவன்!

சீனவை சேர்ந்த 6-ஆம் கிரேட் பள்ளி மாணவர், தன் சொந்த தாயை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்!

Updated: Dec 4, 2018, 04:42 PM IST
பழிவாங்கும் என்னத்தில் சொந்த தாயை கொன்ற 10 வயது சிறுவன்!
Representational Image

சீனவை சேர்ந்த 6-ஆம் கிரேட் பள்ளி மாணவர், தன் சொந்த தாயை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்!

சீனாவை சேரந்த சிறுவன் வூ, ஆறாம் கிரேட் பயிலும் மாணவர். கடந்த ஞாயிறு அன்று கையில் கத்தியுடன் தனது வீட்டிற்கு அருகாமை பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். கையில் ஆயுதத்துடன் திரிந்துக்கொண்டிருந்த சிறுவனை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில் சிறுவனின் தாயார் வீட்டில் கத்தி குத்து காயத்துடன் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. ஞாயிறு அன்று காலை 12.24 மணியளவில் சிறுவனின் தாயார் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் சிறுவன் தான் என வூ-வினை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட தாயின் அருகாமை வீட்டார் தெரிவிக்கையில்.. சிறுவனை அவரது தாயார் அடிக்கடி அடித்து கண்டிப்பது வழக்கம் என தெரியவந்துள்ளது. எனினும் அப்பெண்மனியின் மரணம் குறித்து தகவல் இல்லை.

இந்நிலையில் கொலைசெய்யப்பட்ட பெண்மனியின் மகனது கையில் கத்தி இருந்து பிடிப்பட்டிருப்பது, காவல்துறையினரிடையே மிகுந்த சந்தேகத்தினை எழுப்பியுள்ளது. சிறுவனின் கையில் இருந்த கத்தி தன் தாயை கொல்லவா? (அ) தன் தாயை கொன்றவரை கண்டறிந்து கொல்லவா என சரியான தகவல் காவல்துறையின் முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரயிவரும்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close