பொம்மை புலியை பிடிக்க 45 நிமிட பிளான் போட்ட ஸ்காட்லாந்து போலீஸ்!

45 நிமிட பிளான் போட்டு உயிருள்ள புலி என நினைத்து பொம்மை புலியை சுற்றி வளைத்து சாதனை படைத்த "ஸ்காட்லாந்து போலீஸ்". 

Updated: Feb 9, 2018, 09:55 AM IST
பொம்மை புலியை பிடிக்க 45 நிமிட பிளான் போட்ட ஸ்காட்லாந்து போலீஸ்!
ZeeNewsTamil

லண்டன்: ஸ்காட்லாந்து காவல்துறை ஒரு விநோதமான செயலை செய்துள்ளனர். சுமார் 45 நிமிடம் ப்ளான் பண்ணி ஒரு பெரிய புல்லட் பொம்மை புலியை கண்டு பிடித்துள்ளனர்.

‌இந்த சம்பவம் ஸ்காட்லாந்தின் அபெர்டென்ஷேர் நகரில் பீட்டர்ஹெட் நகரத்தைச் சார்ந்த ஒரு விவசாயி கொடுத்த தகவலின்படி, காவல் துறையினர் அந்த புலியை பிடிக்க சுமார் 45 நிமிடம் திட்டமிட்டு அந்த புலியை எவ்வாறு பிடிப்பத்து என்பது பற்றி திட்டமிட்டுள்ளனர். 

இதையடுத்து, அதிகாரிகளுக்கு விவசாயியின் பீதி அழைப்பைத் தொடர்ந்து, ஆயுதமேந்திய பதிலளிப்புக் குழு உட்பட பலர் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் அது ஒரு பொம்மை என்று அவர்கள் தெரிந்துகொண்டனர்.