அணில் கைதான கதை தெரியுமா?

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அணில் ஒன்றை போலீசாரால் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த அணிலை பெயிலில் விடுவித்துள்ளனர்.

Updated: Dec 6, 2017, 06:06 PM IST
அணில் கைதான கதை தெரியுமா?

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகப் புகழ் பெற்றது. அங்கு சீ கிர்ட் என்ற பகுதியில் மிகவும் பெரிய அளவில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்த நிலையில் அங்கு இருந்த அணில் ஒன்று கிறிஸ்துமஸ் மரத்தில் இருந்த விளக்குகளை  சேதப்படுத்தி இருக்கிறது. இதனால், அந்த மரத்தில் பல விளக்குகள் எரியாமல் போய் இருக்கிறது.

இந்த வேலையை செய்த அணிலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து, அந்த அணிலை நேற்று வெற்றிகரமாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அவர்கள் முகநூளில் பெருமையாக போஸ்ட் போட்டு இருக்கிறார்கள்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த அணில் பெயிலில் விடப்பட்டது. மேலும் அதன்பின் அந்த அணிலை போலீஸ் பார்க்கவேயில்லை என்று கூறியுள்ளனர்."