வடகொரியாவுக்கு இறுதி எச்சரிக்கை : அதிபர் டொனால்டு டிரம்ப்!!

Last Updated : Aug 11, 2017, 08:02 PM IST
வடகொரியாவுக்கு இறுதி எச்சரிக்கை : அதிபர் டொனால்டு டிரம்ப்!! title=

உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா அணு ஆய்த சோதனைகளை நடத்தி வருகிறது. சோதனைகளை பல நாடுகள் அந்நாட்டு மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கு சீனா மற்றும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த வலுவான பொருளாதார தடை தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

ஆனால் தற்போது அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப் போவதாகவும், அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த செயல் மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வடகொரியாவின் செயலால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு தனது டுவிட்டர் பக்கத்தில் இறுதி எச்சரிக்கையை விடுத்து உள்ளார். 

வடகொரியா தொடர்ச்சியாக முட்டாள் தனமான செயல்களில் ஈடுபடுகிறது. எங்கள் ராணுவ முழு தயார் நிலையில் உள்ளது. எனவே வடகொரியா நல்ல வழியை தேர்வு செய்யும் என நம்புகின்றேன் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். 

Trending News