சவுதியில் முதன் முறையாக கால்பந்து போட்டி கண்ட பெண்கள்!

சவுதி அரேபியாவில் முதல் முறையாக ஆண்களின் கால்பந்து போட்டியினை பார்வையிட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Jan 13, 2018, 11:55 AM IST
சவுதியில் முதன் முறையாக கால்பந்து போட்டி கண்ட பெண்கள்! title=

சவுதி அரேபியாவில் முதல் முறையாக ஆண்களின் கால்பந்து போட்டியினை பார்வையிட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியா ஜெட்டாவில் நேற்று கால்பந்துபோட்டியை பார்த்து ரசிக்க, முதன் முறையாக பெண்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய பட்டத்து இளவரசாகப் பொறுப்பேற்றுள்ள முகமது பின் சல்மான் அங்கு சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

சவுதியில் சினிமா தியேட்டர் திறக்கவும் பெண்கள் கார் ஓட்டவும் விளையாட்டுகளை மைதானத்துக்குச் சென்று பார்க்கவும் அனுமதியளித்துள்ளார்.

இந்நிலையில் முதல் முறையாக சவுதி அரேபியாவில் உள்ள விளையாட்டு மைதானங்களில் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி, கால்பந்து போட்டியை காண அனுமதிக்கப்பட்டனர். 

Trending News