எகிப்தில் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு :23 பேர் பலி

Last Updated : May 26, 2017, 05:22 PM IST
எகிப்தில் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு :23 பேர் பலி title=

எகிப்தில் ‘கோப்டிக்’ கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தை அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டதில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு சுமார் 220 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மின்யா மாகாணத்தில் மிகவும் பழமையான பாரம்பரிய இனத்தவர்களான ‘கோப்டிக்’ கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த குருகுலத்திலிருந்து சில கோப்டிக் கிறிஸ்தவர்கள் ஒரு பேருந்தில் பயணம் செய்தனர். அப்பொழுது அந்த பேருந்தை அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் வழிமறித்து  துப்பாக்கிகளால் சுட்டனர். 

இந்த தாக்குதலில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் கோப்டிக் பிரிவு கிறிஸ்தவர்களைக் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்கவில்லை.

இச்சம்பவத்தையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல் ஸிஸி.

Trending News