பாரிஸ் விமான நிலையத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

பாரிஸ் நகரில் உள்ள ஓர்லி விமான நிலையத்தில் இன்று விமானங்களின் பயணிகள் பரபரப்பாக வந்து, சென்று கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் அங்கு நின்றிருந்த ஒரு ராணுவ வீரரை நெருங்கி வந்தார்.

Updated: Mar 18, 2017, 04:12 PM IST
பாரிஸ் விமான நிலையத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
Zee Media Bureau

பாரிஸ்: பாரிஸ் நகரில் உள்ள ஓர்லி விமான நிலையத்தில் இன்று விமானங்களின் பயணிகள் பரபரப்பாக வந்து, சென்று கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் அங்கு நின்றிருந்த ஒரு ராணுவ வீரரை நெருங்கி வந்தார்.

திடீரென்று அந்த வீரரின் இடுப்பில் இருந்த துப்பாக்கியை உருவியபடி, விமான நிலைய வரவேற்பு பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் ஓடி ஒளிய முயன்றார். பின்தொடர்ந்து எச்சரித்தபடி விரட்டிச் சென்ற பாதுகாப்பு படையினர் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் அவரை சுட்டுக் கொன்றதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்ட நபர் யார் என்பது தொடர்பான உடனடி தகவல் இல்லை.