அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனைவி மருத்துவமனையில் அனுமதி!

சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மெலானியா ட்ரம்ப் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Updated: May 15, 2018, 04:38 PM IST
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனைவி மருத்துவமனையில் அனுமதி!

சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மெலானியா ட்ரம்ப் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் முன்னதாக சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
 
இதுகுறித்து மெலானியா ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் தரப்பில், "அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக மேரிலான்ட்டில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நலமாக இருக்கின்றார். மருத்துவ சிகிச்சை முடிந்து ஒருவாரம் அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுக்கவுள்ளார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மெலானியாவை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவியின் நலத்தினை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்!