பாகிஸ்தான் செனட் அவையில் முதல் இந்து தலித் பெண்!

பாகிஸ்தானில் முதல் முறையாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இந்து பெண் ஒருவர் செனட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Last Updated : Mar 13, 2018, 01:17 PM IST
பாகிஸ்தான் செனட் அவையில் முதல் இந்து தலித் பெண்! title=

பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல் அவையான செனட்டில் நேற்று புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். செனட் அவையில் முதல்முறையாக இந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண் பதவி ஏற்றுக்கொண்டார். 

சிந்து மாகாணத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி, பாகிஸ்தான் மக்கள் கட்சியில் இணைந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். நடப்பாண்டில் 39 வயதுடைய இவர் சிந்து மாகாணத்தில் இருந்து சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

இதையடுத்து, நேற்று (மார்ச்-12) அவர் பாகிஸ்தான் செனட்டராக பதவியேற்றார். பாகிஸ்தான் செனட் அவையில் இருக்கும் முதல் இந்து தலித் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

Trending News