பிணத்துக்கே தலைமாற்று ஆபரேசனா!

பிணத்துக்கு நடைபெற்ற தலைமாற்று ஆபரேசன் வெற்றிடைந்ததை தொடர்ந்து மனிதருக்கும் தலைமாற்று ஆபரேசன் நடத்தும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.  

Last Updated : Nov 18, 2017, 06:46 PM IST
பிணத்துக்கே தலைமாற்று ஆபரேசனா! title=

 மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன்கள் நடைபெறுவது சகஜமாகி விட்டது. அதன் அடிப்படையில் தலைமாற்று ஆபரேசன் நடத்தும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். முதல் முறையாக ரஷியாவைச் சேர்ந்த வெலேரி ஸ்பிரிதி நோவ் என்பவருக்கு தலைமாற்று ஆபரேசன் நடத்தப்போவதாக இத்தாலியைச் சேர்ந்த டாக்டர் செர்ஜியோ கனோவெரா அறிவித்தத்துடன்.
இதற்கான சோதனை முயற்சிகளில் கனோவெரா ஈடுபட்டு வந்தார்.

இதன் மூலம் முதன் முறையாக தலைமாற்று ஆபரேசன் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு பிணத்துக்கு தலைமாற்று ஆபரேசன் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. டாக்டர் செர்ஜியோ கனாவெரோ தலைமையிலான குழுவினர் இந்த ஆபரேசனை செய்துள்ளனர். 

சுமார் 18 மணி நேரம் இந்த ஆபரேசனில் புது விதமான தொழில் நுட்பம் பின்பற்றப்பட்டது. தண்டுவடம், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் அனைத்தும் அதி நவீன தொழில் நுட்பத்துடன் தலையுடன் பொருத்தப்பட்டது.
இச்சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலை மாற்று ஆபரேசன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

Trending News