பிரிட்டன் பிரதமரை கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருக்கும் தெரசா மே-வை கொல்வதற்காக டவுனிங் தெருவில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Updated: Dec 6, 2017, 09:25 AM IST
பிரிட்டன் பிரதமரை கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருக்கும் தெரசா மே-வை கொல்வதற்காக டவுனிங் தெருவில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, கடந்த நவம்பர் 28-ம் தேதி தீவிரவாத ஒழிப்பு படையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் இன்று வெஸ்ட்மின்ஸ்டெர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவர். இதனால் பிரிட்டன் பிரதமர் தெரசாவை கொல்ல நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது என ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் 9 சதி திட்டங்கள் முறியடிக்கப்பட்டு உள்ளன என்று தெரசாவின் செய்தி தொடர்பு அதிகாரி கூறியுள்ளார்.