விமான போக்குவரத்தில் அடி வாங்கும் ரஷ்யா! மேற்கத்திய நாடுகளின் தடைகளின் எதிரொலி

Russia Ukraine Crisis: பொருளாதாரத் தடைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா, அதன் விமானிகள் தங்கள் சொந்த விமானத்தை சரி செய்ய விரும்புகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 16, 2022, 04:11 PM IST
  • விமானிகளே விமானத்தை பராமரிக்க வேண்டும்
  • மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் விளைவு
  • விமான போக்குவரத்தில் அடி வாங்கும் ரஷ்யா
விமான போக்குவரத்தில் அடி வாங்கும் ரஷ்யா! மேற்கத்திய நாடுகளின் தடைகளின் எதிரொலி title=

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தன் விளைவாக மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் ரஷ்ய விமானப் போக்குவரத்துத் துறையை மோசமாகப் பாதித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் கனடா ஆகியவை ரஷ்ய விமானங்கள், தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் எதிர்மறை விளைவுகளை எதிர் கொண்டு வரும் ரஷ்யா, பிராந்திய விமான நிறுவனங்களின் விமானிகளே, தங்கள் சொந்த விமானங்களை பராமரிக்க வேண்டும் என்று நியூஸ் வீக் செய்தி வெளியிட்டுள்ளது. 

ரஷ்யாவின் கைத்தொழில் மற்றும் வர்த்தக துணை அமைச்சர் ஒலெக் போச்சரோவ், இந்த மாத தொடக்கத்தில் விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார மன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

மேலும் படிக்க | சீன அதிபரை சந்திப்பாரா பிரதமர் மோடி?

"போக்குவரத்து அமைச்சகத்துடன் சேர்ந்து, விமானிகளை உலகளாவிய போர்வீரர்களாகப் பயிற்றுவித்து சான்றளிக்க வேண்டும். அவர்கள் ஒரே நேரத்தில் விமானிகளாகவும், விமான தொழில்நுட்ப வல்லுனர்களாகவும் பணியாற்ற வேண்டும். மேலும் இந்த உபகரணங்கள் செயல்பாட்டில் களம் பழுதுபார்க்கும் சாத்தியத்தை வழங்க வேண்டும்" என்று போச்சரோவ் தெரிவித்தது சர்வதேச அளவில் பேசு பொருளாகி உள்ளது.

தனது கருத்து தொடர்பாக பேசும் ரஷ்ய அமைச்சர், "நாங்கள் விமானிகளைப் பற்றி பேசுகிறோம், முதன்மையாக பிராந்திய விமானப் போக்குவரத்து, புதிய வகை உள்நாட்டு பிராந்திய விமானங்களின் விமானத் தகுதியைப் பராமரிப்பதற்கான அடிப்படையில் புதிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்," என்று கூறுகிறார்.

மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் விமானப் போக்குவரத்துத் தொழிலை மோசமாக பாதித்துள்ளன, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை ரஷ்யா சமாளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 

மேலும் படிக்க | அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தஸ்தின் அடையாளம் கண்டுபிடிப்பு

ரஷ்யாவின் முதன்மையான விமான நிறுவனமான ஏரோஃப்ளோட், பெலாரஸைத் தவிர அனைத்து சர்வதேச விமானங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. 

தங்கள் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைக்கு, உக்ரைன் மீதான போர் மட்டுமே காரணம் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. ஏப்ரல் மாதம் 21 ரஷ்ய விமானங்களை, வான் பாதுகாப்பு தடைப் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்துள்ளது. இது "பாதுகாப்பு அடிப்படையில்" தங்களது பிராந்தியத்தில் செயல்படுவதைத் தடுக்கிறது.

மேலும் படிக்க | சீறி சினந்து முட்டி மோதும் காளைகள்! கொம்பு சீவி விட்டது யாரோ?

மேலும் படிக்க | சனி கிரகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சனியின் வளையங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News