சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் 52 பேர் பலி

Updated: May 19, 2017, 05:26 PM IST
சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் 52 பேர் பலி
ஜீ நியூஸ் தமிழ்

சிரியாவின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஹமா மாகாணத்தில் அமைந்திருக்கும் 2 கிராமங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் திடீரென்று 

கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட 52 பேர் கொல்லப்பட்டனர்.தாக்குதல் நடத்த பட்ட இரண்டு கிராமங்களிலும் 15 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகளும் இறந்துள்ளனர். மேலும் 27 அரசு ஆதரவு படை வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிகிறது. 

இதில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பை சேர்ந்த 10 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல சிரியா அரசுப் படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.