சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.3ஆக பதிவு

தென் அமெரிக்கா நாடான பெரு கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.3ஆக பதிவு. 

Updated: Jan 14, 2018, 04:59 PM IST
சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.3ஆக பதிவு
ZeeNewsTamil

தென் அமெரிக்கா பெரு நாட்டின் கடற்கரை பகுதியில் இன்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.3 என பதிவாகி உள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இந்திய நேரப்படி இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, பெரு பகுதியில் சுமார் 300 கி.மீ பரப்பளவிற்கு இந்த நிலநடுக்கமானது உனரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பெரு கடலோர பகுதி சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.எனினும் இந்த நிலநடுக்கத்தில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.