சர்வதேச மகிழ்ச்சி தினம் 2017: மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 122-வது இடம்

Updated: Mar 21, 2017, 10:25 AM IST
சர்வதேச மகிழ்ச்சி தினம் 2017: மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 122-வது இடம்
Representational Image

சர்வதேச மகிழ்ச்சி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அப்பொழுது உலகில் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது.

மொத்தம் 155 நாடுகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. முதல்முறையாக, இந்தப் பட்டியலில் நார்வே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் இந்தியா 122-வது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் 118-வது இடத்தை இருந்த இந்தியா, இந்த ஆண்டு 4 இடங்கள் பின்தங்கி உள்ளது. இந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நமது அண்டை நாடுகளான சீனா (79), பாகிஸ்தான் (80), நேபாளம் (99), வங்காளதேசம் (110), இலங்கை (120) போன்ற நாடுகள் இந்தியாவை விட முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இடத்தில் இருந்த அமெரிக்கா, இந்த ஆண்டு வெளியான பட்டியலில் 14-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.