)
Trump's 50% Tax: இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரிவிதிக்கக்கூடிய உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே கையெடுத்துட்டு போட்டு, 21 நாட்கள் கெடு விதித்திருந்தார். அதாவது ரஷ்யா கிட்ட இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மிகப்பெரிய எருசக்தியை வாங்கக்கூடிய நாடாக இந்தியா இருந்து வருகிறது. எனவே ரஷ்யாவிடம் இருந்து வாங்கக்கூடாது. மீறினால் 25% கூடுதல் வரி விதிக்கப்படும்என இந்தியாவை எச்சரித்திருந்தார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்பினுடைய இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சகம், "இந்த நடவடிக்கைகள் முற்றிலும் நியாயமற்றது. இது தவறான போக்கு. வரியை வாபஸ் வாங்க நாங்கள் திரும்பவும் வலியுறுத்துறோம்" எனக் கூறியிருந்தது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடிய மிகப்பெரிய நாடுகளில் ஒன்றா இந்தியா இருக்கிறது. இந்திய பொருட்கள் மீதான வரி என்பது சீன பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கப்பட்ட வரியை விட 20% அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. இதன்மூலம் இந்தியாவின் ஏற்றுமதி துறையில் மற்ற நாடுகளுடனான போட்டித்தன்மை கணிசமாக குறையும்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு ஆகஸ்ட் 27 புதன்கிழமை காலை 9:31 மணிக்கு அமலுக்கு வந்தது. இது தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதைக் குறித்து பார்ப்போம்.
1. உலகின் மிகக் கடுமையான வரி விதிப்புகளில் ஒன்றை இந்தியா எதிர்கொள்கிறது. அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி விகிதம் 34% ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடுகிறது. இது சீனாவிற்கு அடுத்தபடியாகவும். ஆனால் வரி விதிப்பின் காரணமாக ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்படலாம்.
2. இந்தியாவை பொறுத்தவரைக்கும் ஜவளித்துறை, தோல் பொருட்கள், விலை மதிப்புமிக்க கற்கள், ஆபரணங்கள், ரசாயனங்கள், மின்னணு பொருட்கள் இது மாதிரியான துறைகள் கடுமையாகவே பாதிக்கப்படும்.
3. அமெரிக்காவின் வரி விதிப்பால் குறிப்பாக ஜவுளிகள் அதிகமாக பாதிக்கப்படக்கூடியதாகத் தெரிகிறது. 50% வரி எனபது பருத்தி, படுக்கை, துணி மற்றும் ஜெர்சி போன்ற வகைகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இது வியட்னாம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஈகவடார் போன்ற நாடுகள் அமெரிக்க சந்தைக்கு போட்டியிட்டு வருவதால், குறைந்த வரிகள் காரணமாக அவர்கள் முன்னேற்றம் காண வாய்ப்பும் இருக்கிறது.
4. ரத்தினக் கற்கள் மற்றும் நகைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மருந்து பொருட்களுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யக்கூடிய முக்கியமான பொருட்களில் நகைகள் மற்றும் விளையுயர்ந்த கற்கள் இடம் பெற்றுள்ளன. இதன் ஏற்றுமதியில் சுமார் 30 சதவீதத்தை அமெரிக்காவிடம் உள்ளது. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து முக்கிய ஏற்றுமதி இருக்கும் இந்த துறையில் தேவை குறையும் அபாயம் உள்ளது.
5. இந்தியா சந்தைப் பங்கை நேரடியாக பாதிக்கும். தொழிலாளர்-கனரக தொழில்களில் வேலைகள் மற்றும் நுகர்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.
6. நாட்டின் ஏற்றுமதியை கணிசமாகவே பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யக்கூடிய பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வாகன பாகங்கள் கிட்டத்தட்ட பாதிக்கு மேல பாதிக்கப்படும்.
7. 2024 ஆம் ஆண்டு இந்தியா கிட்டத்தட்ட 87.3 பில்லியன் டாலர் மதிப்பிருக்கக்கூடிய பொருட்கள் மற்றும் சர்வீஸ் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.
8. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவின்ஏற்றுமதி துறைகள் வரிடம் தோறும் 18 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதிப்பை சந்திக்க நேரிடும். ஒரு பக்கம் இந்தியாவிற்கான வருவாய் குறையும். மறுபக்கம் விலைகள் உயரும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலை இழப்பு ஆபத்து ஏற்படலாம்.
9. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நிலையில், இந்தியா ஏற்றுமதிகளை இழப்பது மட்டுமல்லாமல், முதலீடு குறைந்து, வேலை வாய்ப்பு பெரிய அளவில் பாதிக்கப்படும்.
10. மருந்து பொருட்கள், எரிசக்தி துறை அதாவது கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் இயற்கை எரிவாயு, நிலக்கரி, எலக்ட்ரானிக்ஸ், செமி கண்டக்டர் போன்ற பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ