ரூ. 2000க்கு மேல் UPIல் பணம் அனுப்பினால் 18% வரி? மத்திய அரசு விளக்கம்!

UPI சேவைக்கு ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் வெளியான நிலையில், மத்திய அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Apr 19, 2025, 06:28 AM IST
  • UPI சேவைக்கு ஜிஎஸ்டி?
  • 18% வரி விதிக்க வாய்ப்பு.
  • நிதி அமைச்சகம் விளக்கம்.
ரூ. 2000க்கு மேல் UPIல் பணம் அனுப்பினால் 18% வரி? மத்திய அரசு விளக்கம்!

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) இந்தியாவில் அன்றாட வாழ்க்கையின் கட்டமைப்பில் ஒரு அங்கமாக மாறி உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மக்களின் கைகளில் தடையின்றி தன்னை இணைத்துக் கொண்டது UPI. இந்தியா முழுவதும் தடையின்றி பண பரிவர்த்தனைகள் நடக்க UPI அதிகமாக உதவுகிறது. இந்த சேவை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றது. தற்போது மில்லியன் கணக்கானவர்களுக்கு தவிர்க்க முடியாத நிதிக் கருவியாக வளர்ந்துள்ளது. ஆரம்பத்தில், அதன் பயன்பாடு மற்றும் பாதுகாப்பைச் சுற்றி ஒரு சந்தேக அலை இருந்தது. இருப்பினும், பலரும் தொடர்ந்து பயன்படுத்த தொடங்கினர்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | உங்கள் EPF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது? தெரிந்துகொள்ள ஈசியான 5 வழிகள் இதோ

மலிவு விலையில் ஸ்மார்ட் போன், இலவச டேட்டா, ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஆபர்கள் ஆகியவை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான அடித்தளத்தை உருவாக்கியது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது UPI சேவையின் தேவையை ஊக்குவித்தது. அதன்பிறகு தான் தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் UPI ஐ தினசரி பயன்படுத்த தொடங்கினர். இன்று, UPI சேவை பெட்டிக்கடை முதல் உயர்தர கார் ஷோரூம்கள் வரை பயன்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் முதல் பெயர்வர்கள் வரை அனைவரும் எளிதாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் UPI பரிவர்த்தனை 24.77 லட்சம் கோடி ரூபாய்யாக உள்ளது.

UPI சேவைக்கு 18% வரையா?

UPI பரிவர்த்தனையை சுற்றி எப்போதும் பல சர்ச்சைகள் இருந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் 2,000 ரூபாய்க்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகள் மீது 18% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வதந்தி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற வரி டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஆர்வத்தை குறைத்து நுகர்வோர் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், மத்திய நிதி அமைச்சகம் இந்த அச்சங்களைத் தணிக்க முன்வந்துள்ளது. UPI பரிவர்த்தனைகள் மீதான ஜிஎஸ்டி என்ற தகவல் முற்றிலும் தவறானது என்று விளக்கம் அளித்துள்ளனர். அத்தகைய வரியை விதிக்கும் எந்த திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

எதிர்காலத்தில் வரி விதிக்கப்படுமா?

நிதித் துறையில் உள்ள வல்லுநர்கள் UPI சேவைக்கு வரும் காலத்தில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுமா என்ற கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், MIRA Moneyன் இணை நிறுவனர் ஆனந்த் கே.ரதி இந்த விஷயத்தில் ஒரு விமர்சனக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். UPI பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி நேரடியாக விதிக்கப்படும் என்று கருதுவது தவறான கருத்து. அதற்கு பதிலாக, PhonePe, Google Pay மற்றும் Paytm போன்ற கட்டணச் சேவை வழங்குநர்கள் தங்கள் சலுகைகளுக்கு சேவைக் கட்டணங்களை அறிமுகப்படுத்தினால் நிலையான ஜிஎஸ்டி 18% ஆக இருக்கும்.

தற்போது இரண்டு வங்கிகளுக்கு இடையே நடத்தப்படும் UPI பரிமாற்றங்களுக்கு எந்த ஒரு கட்டணமும் இல்லை. UPI மூலம் நடத்தப்படும் பெரும்பாலான பரிவர்த்தனைகள் இலவசம். இருப்பினும் ஒரு பயனர் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட பரிவர்த்தனை வரம்பை மீறினால் பிறகு கட்டணம் விதிக்கப்படலாம். இந்த அமைப்பு பயனர்களிடையே தடையற்ற பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது, இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இருப்பினும், கட்டணத் தளங்கள் மூலம் சேவைக் கட்டணங்களை அறிமுகப்படுத்துவது டிஜிட்டல் கட்டணங்களின் நிலப்பரப்பில் ஒரு மாற்றத்தைக் குறிக்கலாம், குறிப்பாக அந்தக் கட்டணங்கள் பொதுவானதாகி, வரிவிதிப்புக்கு உட்பட்டால் மக்களின் தலையில் முடியலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஊதியம், ஓய்வூதியம் மட்டுமல்ல அலவன்சுகளும் அதிரடியாய் அதிகரிக்கும், கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News