Alert... மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்கவேண்டிய சில முக்கிய வேலைகள் இவை தான்... நோட் பண்ணிக்கோங்க

31 March 2025 Deadline: 2024-25 நிதியாண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2025 மார்ச் 31ம் தேதி காலக்கெடுவைக் கொண்ட முக்கிய பணிகளை அறிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 27, 2025, 04:17 PM IST
  • மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்கும் PM இன்டர்ன்ஷிப் திட்டம்.
  • மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் முதலீடு.
  • புதுப்பிக்கப்பட்ட ITR படிவத்தை தாக்கல் செய்ய விரும்புபவர்களுக்கான கடைசி தேதி.
Alert... மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்கவேண்டிய சில முக்கிய வேலைகள் இவை தான்... நோட் பண்ணிக்கோங்க

நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாதத்தில் பல முக்கிய வேலைகளை நிறைவு செய்வதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2025 மார்ச் 31ம் தேதி காலக்கெடுவைக் கொண்ட முக்கிய பணிகளை அறிந்து கொள்வோம்.

Add Zee News as a Preferred Source

புதுப்பிக்கப்பட்ட ITR

புதுப்பிக்கப்பட்ட வருமானம் 2022 பட்ஜெட்டில் வருமான வரி சட்டத்தின் 139(8) பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதன் கீழ், வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி தாக்கலில் கொடுத்த வருமான விபரங்களை திருத்த நினைத்தால், புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கும் வகையில் இது கொண்டு வரப்பட்டது. வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்யாவிட்டாலோ அல்லது சில தகவல்களை திருத்த அல்லது மாற்ற நினைத்தாலோ புதுப்பிக்கப்பட்ட ரிட்டனைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த ஆண்டு, புதுப்பிக்கப்பட்ட ITR படிவத்தை தாக்கல் செய்ய விரும்புபவர்களுக்கான கடைசி தேதி மார்ச் 31, 2025 ஆகும்.

PM இன்டர்ன்ஷிப் திட்டம்

மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்கும் PM இன்டர்ன்ஷிப் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், அதன் கீழ் பதிவு செய்வதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2025 ஆகும். முன்னதாக இதற்கான காலக்கெடு மார்ச் 12 ஆக இருந்தது, அது பின்னர் நீட்டிக்கப்பட்டது. பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் (PMIS) கடந்த 2024 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில், 10 மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் முதலீடு

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் முதலீட்டின் கீழ் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும்.  பெண்களுக்கான நிதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பெண்கள் அல்லது சிறுமிகள் மட்டுமே முதலீடு செய்ய முடியும் அல்லது அவர்களின் பாதுகாவலர்கள் யாரேனும் அவர்கள் சார்பாக இந்தத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தது 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதேசமயம்  அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

வரி  சேமிப்பு முதலீடு

நீங்களும் வருமான வரியைச் சேமிக்க சில முதலீடுகளைச் செய்ய விரும்பினால், உங்களுக்கு மார்ச் 31, 2025 வரை கால அவகாசம் உள்ளது. 2024-25 நிதியாண்டிற்கான ITR தாக்கல் செய்யும் போது, ​​மார்ச் 31, 2025 வரை செய்யப்படும் முதலீடுகளின் பலனைப் பெறுவீர்கள். 

சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டி

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களில் தற்போது கிடைக்கும் வட்டி விகித அளவுகள் மார்ச் 31, 2025 அன்று வரை அமலில் இருக்கும். இதற்குப் பிறகு புதிய வட்டி விகிதங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். அதில் அவை குறைக்கப்படலாம், அல்லது அதிகரிக்கப்படலாம். அல்லது மாற்றம் ஏதும் இல்லாமல் தொடரலாம். 

மேலும் படிக்க | ரயிலில் இலவசமாக பயணிக்கலாம், இதை மட்டும் செய்யதால் போதும்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: மாதம் ரூ.14,000 - ரூ.19,000 கூடுதலாக கிடைக்கும்... அறிக்கையில் குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News