)
Central Government Employees Latest News: மத்திய அரசு அக்டோபர் 1 ஆம் தேதி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய பண்டிகை கால பரிசை வழங்கியது. ஜூலை-டிசம்பர் 2025 காலத்திற்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றில் 3% அதிகரிப்பை அரசாங்கம் அறிவித்தது. இந்த முடிவு 1.2 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும். அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்கள் 55% இலிருந்து 58% ஆக அதிகரித்துள்ளன. இந்த அதிகரிப்பு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும்.
இந்த முறை தீபாவளிக்கு முன், மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு பெரிய பரிசுகள் கிடைத்துள்ளன. இதில் 3 பரிசுகள் ஏற்கனவே கிடைத்துவிட்ட நிலையில், மற்றொரு பரிசு இன்னும் சில நாட்களில் கிடைக்கவுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்காக எடுக்கப்பட்ட / எடுக்கப்படவுள்ள 4 முக்கிய முடிவுகள் இதோ:
- Dearness Allowance: அகவிலைப்படி அதிகரிப்பு
- Salary Hike: ஊதிய உயர்வு
- Diwali Bonus: தீபாவளி போனஸ்
- 8th Pay Commission: 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாக டிஏ உயர்வுக்கான அறிவிப்பு வந்தது. ஜூலை-டிசம்பர் 2025 காலத்திற்கான அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்தது. அரசாங்கம் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை 3% அதிகரித்தது. இதன் மூலம் மொத்த அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக உயர்ந்துள்ளது.
ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படியை அதிகரிக்கிறது - ஒன்று ஜனவரி முதல் ஜூன் வரை மற்றும் மற்றொன்று ஜூலை முதல் டிசம்பர் வரை. பொதுவாக இது பிப்ரவரி-மார்ச் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்படும். ஜூலை 2025 -இல் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்துள்ளதால், ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும்.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 3% அதிகரித்துள்ளதால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் ஊதிய மற்றும் ஓய்வூதிய உயர்வு கிடைத்துள்ளது. ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.
சம்பள உயர்வு
- லெவல் 1 -இல் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000.
- அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டதால், அவர்களது சம்பளம் மாதத்திற்கு ரூ.540 அதிகரிக்கும்.
- இதைத் தொடர்ந்து லெவல் 1 ஊழியர்களுக்கு இப்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் (ரூ.18,000 இல் 58%) மொத்த அகவிலைப்படி மாதத்திற்கு ரூ.10,440 ஆக இருக்கும்.
ஓய்வுதிய உயர்வு
- தற்போது குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது.
- டிஆர் உயர்வு மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு மாதத்திற்கு ரூ.270 கூடுதலாக ஓய்வூதியம் கிடைக்கும்.
- இதனால் மொத்த ஓய்வூதியம் ரூ.5,220 ஆக அதிகரிக்கும்.
அகவிலைப்படி அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனசும் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு குரூப் சி மற்றும் நான்-கெசட்டட் குரூப் பி ஊழியர்கள் 2024-25 ஆம் ஆண்டிற்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமான "அட்-ஹாக் போனஸ்" பெறுவார்கள் என்று நிதி அமைச்சக உத்தரவு மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொகை ரூ.6,908 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
8வது சம்பளக் குழு அமைக்கப்படுவதற்காக மத்திய ஊழியர்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரியில் அரசாங்கம் இதை அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை எந்த உறுதியான புதுப்பிப்பும் வெளியாகவில்லை. அக்டோபர் மாதத்தில், குறிப்பாக தீபாவளிக்கு முன், 8வது சம்பளக் குழு அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வந்துள்ளன. இது நடந்தால், அது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசாக இருக்கும். இந்த ஆணையம் ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும்.
அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் அழுத்தம்
8வது ஊதியக்குழு அமைப்பது தொடர்பாக அனைத்து தரப்பிலிருந்தும் மத்திய அரசின் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், ரயில்வே ஊழியர்களின் அமைப்புகள் இந்தப் பிரச்சினையில் குரல் எழுப்பியுள்ளன. ஏழாவது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025 இல் முடிவடையப் போகிறது, அதன் பிறகு புதிய ஆணையத்தின் தேவை இன்னும் முக்கியமானதாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அப்டேட்ஸ் சுருக்கமாக......
- இந்த தீபாவளி மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்திகள் காத்திருக்கின்றன.
- 7வது ஊதியக்குழுவின் கடைசி டிஏ உயர்வில், அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டது.
- இதைத் தொடர்ந்து சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது.
- ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் பற்றிய மிகப்பெரிய அப்டேட் அக்டோபரில் வரக்கூடும்.
- மொத்தத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த தீபாவளியில் பல தித்திக்கும் செய்திகள் கிடைத்துள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ