)
7th vs 8th Pay Commission: 2016 -இல் 7வது ஊதியக்குழு அமலுகு வந்தது. அது ஒரே இரவில் ஊழியர்களின் சம்பளத்தில் மாயாஜாலம் செய்து அதை பன்மடங்கு அதிகரித்தது. 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்ற மந்திரக்கோல் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான ரூ.7,000 ஐ ரூ.18,000 ஆக உயர்த்தியது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.
இப்போது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த ஊதியக்குழுவிற்கான நேரம் வந்துவிட்டது. 8வது ஊதியக்குழு பற்றி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 3.0 -க்குள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. எனினும், தற்போதைய பொருளாதார நிலை, அரசுக்கு ஆகும் நிதிச்சுமை ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அரசு 1.92 ஆகவே நிர்ணயிக்கும் என நிபுணர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
7வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக இருந்தால், ஊதியம் குறையுமா, அதிகரிக்குமா? இந்த சந்தேகமும் அச்சமும் பல ஊழியர்களுக்கு உள்ளது. இதற்கான விளக்கத்தை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது ஒரு ஒரு பெருக்கியாகும். ஊதியக்குழுக்கள் புதிதாக அமல்படுத்தப்படும் போது, அப்போதைய அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் கணக்கிடப்படுகின்றது. ஆகையால் புதிய சம்பளத்தை நிர்ணயிப்பதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.
8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்படால், அடிப்படை ஊதியம் ₹30,000, ₹50,000 அல்லது ₹80,000 ஆக உள்ள ஊழியர்களின் சம்பளத்த்ல் என்ன மாற்றம் வரும் என இங்கே காணலாம். மேலும், 7வது மற்றும் 8வது ஊதியக் குழுக்களுக்கு இடையிலான நேரடி வேறுபாட்டையும் ஆராயலாம்.
ரூ.30,000 அடிப்படை ஊதியம்
7வது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம்: ரூ.30,000 அடிப்படை ஊதியம்
ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: 1.92
8வது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம்: ரூ30,000 x 1.92 = ரூ.57,600
நேரடி அதிகரிப்பு: ரூ.27,600
7th vs 8th CPC: ஒப்பீடு
7வது மற்றும் 8வது ஊதியக்குழுக்களின் அசல் ஒப்பீட்டை இப்போது காணலாம். 7வது சம்பளக் குழுவின் கீழ் ரூ.30,000 அடிப்படை சம்பளத்தைப் பெற, 6வது சம்பளக் குழுவின் கீழ் அந்த ஊழியரின் அடிப்படை சம்பளம் தோராயமாக ரூ.11,673 ஆக இருந்திருக்கும்.
7வது ஊதியக்குழு அதிகரிப்பு: ரூ.30,000 - ரூ.11,673 = ரூ.18,327
8வது ஊதியக்குழு அதிகரிப்பு: ரூ.57,600 - ரூ.30,000 = ரூ.27,600
முடிவு: 1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஐ விடக் குறைவாக இருந்தாலும், 8வது சம்பளக் குழுவின் கீழ் ஊழியர்கள் ரூபாய் அடிப்படையில் அதிகப் பயனடைகிறார்கள்.
ரூ.50,000 அடிப்படை ஊதியம்
7வது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம்: ரூ.50,000 அடிப்படை ஊதியம்
ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: 1.92
8வது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம்: ரூ50,000 x 1.92 = ரூ.96,000
நேரடி அதிகரிப்பு: ரூ.46,000
7th vs 8th CPC: ஒப்பீடு
7வது மற்றும் 8வது ஊதியக்குழுக்களின் அசல் ஒப்பீட்டை இப்போது காணலாம். 7வது சம்பளக் குழுவின் கீழ் ரூ.50,000 அடிப்படை சம்பளத்தைப் பெற, 6வது சம்பளக் குழுவின் கீழ் அந்த ஊழியரின் அடிப்படை சம்பளம் தோராயமாக ரூ.19,455 ஆக இருந்திருக்கும்.
7வது ஊதியக்குழு அதிகரிப்பு: ரூ.50,000 - ரூ.19,455 = ரூ.30,545
8வது ஊதியக்குழு அதிகரிப்பு: ரூ.96,000 - ரூ.50,000= ரூ.46,000
முடிவு: இங்கும், 1.92 என்ற ஃபிட்மென்ட் காரணி 7வது சம்பள கமிஷனை விட அதிக உண்மையான பணப் பலனை உங்களுக்கு வழங்குகிறது.
ரூ.80,000 அடிப்படை ஊதியம்
7வது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம்: ரூ.80,000 அடிப்படை ஊதியம்
ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: 1.92
8வது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம்: ரூ80,000 x 1.92 = ரூ.1,53,600
நேரடி அதிகரிப்பு: ரூ.73,600
7th vs 8th CPC: ஒப்பீடு
7வது மற்றும் 8வது ஊதியக்குழுக்களின் அசல் ஒப்பீட்டை இப்போது காணலாம். 7வது சம்பளக் குழுவின் கீழ் ரூ.80,000 அடிப்படை சம்பளத்தைப் பெற, 6வது சம்பளக் குழுவின் கீழ் அந்த ஊழியரின் அடிப்படை சம்பளம் தோராயமாக ரூ.31,128ஆக இருந்திருக்கும்.
7வது ஊதியக்குழு அதிகரிப்பு: ரூ.80,000 - ரூ.31,128 = ரூ.48,872
8வது ஊதியக்குழு அதிகரிப்பு: ரூ.1,53,600 - ரூ.80,000= ரூ.73,600
முடிவு: இங்கும் 8வது ஊதியக்குழுவிலேயே அதிக உயர்வு இருக்கிறது.
7வது ஊதியக் குழுவின் கீழ் உங்கள் அடிப்படை சம்பளம் ஏற்கனவே கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, அந்த அதிகரித்த அடிப்படை சம்பளம் 1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரால் பெருக்கப்படும்போது, மொத்த ரூபாய் அதிகரிப்பு 6வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்த அடிப்படை சம்பளம் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரால் பெருக்கபட்டதை விட அதிகமாக இருக்கும்.
இந்த கணக்கீடுகள் சற்று குழப்பமாக இருக்கலாம். ஆனால், மத்திய அரசு ஊழியர்கள் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். 8வது ஊதியக்குழுவில் 1.92 ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட்டால், அது 7வது ஊதியக்குழுவின் 2.57 -ஐ விட குறைவாக உள்ளதே என கவலை கொள்ள வேண்டாம். உண்மையில், இந்த எண் ஒரு பெருக்கியாக செயல்படுவதால், எப்ப்டியும் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும் என்பது உறுதி.
7வது vs 8வது ஊதியக்குழு சுருக்கமாக....
- 7வது ஊதியக்குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிகப்படும் என கூறப்படுகின்றது.
- ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறைந்தாலும், ஊதியம் குறையாது.
- 7வது ஊதியக்குழுவில் கிடைத்த ஊதிய உயர்வை விட 8வது ஊதியக்குழுவில் ஊழியர்களின் ஊதிய உயர்வு அதிகமாகவே இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ