)
7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இன்னும் சில நாட்களில் நல்ல செய்தியை பெறக்கூடும். தற்போது அமலில் இருக்கும் 7வது ஊதியக் குழுவின் கீழ் அவர்களுக்கு இன்னும் ஒரு அகவிலைப்படி உயர்வு கிடைக்கவுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த குட் நியூஸ்
- சமீபத்திய பணவீக்க புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 2025 இல் 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- இது நாட்டின் கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
அகவிலைப்படி உயர்வு
- அகவிலைப்படி (Dearness Allowance) ஆண்டுக்கு 2 முறை அதிகரிக்கப்படுகின்றது.
- இது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அமலுக்கு வருகிறது.
- இதற்கான அறிவிப்பு பிப்ரவரி-மார்ச் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வெளிவரும்.
- இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பணவீக்கத்தைச் சமாளிக்க உதவுகிறது.
தற்போது அகவிலைப்படி எவ்வளவு அளிக்கப்படுகின்றது?
- இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அகவிலைப்படி 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.
- அதன் பிறகு தற்போது அகவிலைப்படி 55% ஆக உள்ளது.
- அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுவது போல, ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் வழங்கப்படுகிறது.
அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
- அகவிலைப்படி தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
- நாட்டின் 88 தொழில்துறை மையங்களில் உள்ள 317 சந்தைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளின் அடிப்படையில் AICPI-IW குறியீடு வெளியிடப்படுகிறது.
- ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகம் தொழிலாளர்களுக்கு பணவீக்க அதிகரிப்பு அல்லது வீழ்ச்சி பற்றிய தகவல்களை வழங்குகிறது.
- இந்த அடிப்படையில், அகவிலைப்படி அதிகரிப்பு தீர்மானிக்கப்படுகிறது.
டிஏ உயர்வு
- மார்ச் 2025 இல், பணவீக்க மீட்டர் AICPI-IW 143 ஆக இருந்தது.
- இது மே மாதத்திற்குள் 144 ஆக அதிகரித்தது.
- இதன்படி, அகவிலைப்படி மூன்று முதல் நான்கு சதவீதம் வரை அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது.
டிஏ அரியர்
ஜூலை 2025-க்கான டிஏ உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். எனினும், அறிவிப்பு எப்போது வந்தாலும், ஜூலை முதலான டிஏ அரியர் தொகை கண்டிப்பாக கிடைக்கும்.
அகவிலைப்படி சூத்திரம்
கடந்த 12 மாதங்களின் CPI-IW தரவுகளின் சராசரி மற்றும் 7வது ஊதியக் குழுவின் கீழ் கொடுக்கப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையில் அரசாங்கம் அகவிலைப்படியைக் கணக்கிடுகிறது.
அறவிலைப்படி (%) = [(12 மாத சராசரி CPI-IW – 261.42) ÷ 261.42] × 100
CPI-AL மற்றும் CPI-RL இரண்டிலும் சரிவு
- மே 2025க்கான CPI-IW தரவு இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், பணவீக்கத்தின் புதிய போக்கிலிருந்து ஒரு தோராயமான மதிப்பீடு செய்யப்படுகிறது.
- விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் மே 2025 இல் முறையே 2.84 சதவீதம் மற்றும் 2.97 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இது ஏப்ரல் மாதத்தில் 3.5 சதவீதமாக இருந்தது.
- CPI-AL மற்றும் CPI-RL இரண்டும் 1305 மற்றும் 1319 புள்ளிகளாகக் குறைந்துள்ளன.
- இது கிராமப்புற பணவீக்கத்தில் சரிவைக் குறிக்கிறது.
- CPI-AL மற்றும் CPI-RL ஆகியவை நேரடியாக அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜூன் 2025 -க்கான CPI-IW தரவு வெளியிடப்பட்ட பின்னரே ஜூலைக்கான டிஏ உயர்வு குறித்த இறுதி உயர்வு அறியப்படும்.
ஜூலை 2025 டிஏ உயர்வு சுருக்கமாக....
- ஆண்டுக்கு 2 முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது.
- தற்போது அகவிலைப்படி 55% ஆக உள்ளது.
- ஜூலை 2025 -இல் அகவிலைப்படி 3% அல்லது 4% அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.
- ஜூன் 2025 -க்கான CPI-IW தரவு வெளியிடப்பட்ட பின்னரே இதில் தெளிவு கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ