7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய செய்தி கிடைத்துள்ளது. வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 2% அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
Dearness Allowance: அகவிலைப்படி அதிகரிப்பு
அகவிலைப்படியில் இந்தத் திருத்தத்தின் மூலம், அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக உயரும். இதற்கான எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்த நிலையில், இன்று அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு முன்னர் ஜூலை 2024 முதல் அகவிலைப்படி 50% இலிருந்து 53% ஆக உயர்த்தப்பட்டது.
DA Arrears: டிஏ அரியர்
ஜனவரி 2025 -க்கான டிஏ உயர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி முதலான டிஏ அரியர் தொகையும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். அதேபோல, ஓய்வூதியதாரர்களும் அகவிலை நிவாரண அரியர் தொகையை பெறுவார்கள்.
Salary Hike For Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு
அகவிலைப்படி 2% அதிகரித்துள்ளதால், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.360 சம்பள உயர்வு கிடைக்கும். ஆண்டுக்கு இது ரூ.4,344 ஆக இருக்கும்.
Pension Hike For Pensioners: ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
அகவிலை நிவாரணமும் 2% அதிகரித்துள்ளதால், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 லிருந்து ரூ.13,950 ஆக அதிகரிக்கும்.
What is Dearness Allowance: அகவிலைப்படி என்றால் என்ன?
அகவிலைப்படி (DA) என்பது பணவீக்கத்தை ஈடுகட்டவும், ஊழியர்களின் சம்பளம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்யவும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் நிதிப் பலனாகும். அடிப்படை சம்பளங்கள் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக் குழுக்களால் தீர்மானிக்கப்படுகின்றது. பணவீக்கத்தை நிர்வகிக்க ஊழியர்களுக்கு உதவும் வகையில் அவ்வப்போது சம்பள மாற்றங்களை அகவிலைப்படி உறுதி செய்கிறது.
மேலும் படிக்க | EPFO வட்டி விகிதம் அதிகரிக்கிறதா? மத்திய அரசு தந்த முக்கிய அப்டேட்
மேலும் படிக்க | SIP Mutual Fund: ஆயிரங்களை கோடிகளாக்கும் எஸ்ஐபி மந்திரம்... 5 காரணங்கள் இது தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









