)
DA Hike Latest News: மத்திய அரசு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை காலத்திற்கான குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணம் (DR) ஆகியவவை 3% அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பு 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும்.
புதன்கிழமை, மோடி அரசாங்கத்தின் மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை 55% இலிருந்து 58% ஆக உயர்த்தும் முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த முடிவு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வந்துள்ள இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
ஜூலை 2025 -க்கான டிஏ உயர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இது 7வது சம்பளக் குழுவின் கடைசி அகவிலைப்படி உயர்வாகும். 7வது உதியக்குழு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. பொதுவாக ஊதியக்குழுக்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமலுக்கு வருகின்றன. அந்த வகையில் ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வர வேண்டும். ஆகையால், 7வது ஊதியக்குழுவின் கடைசி அகவிலைப்படி உயர்வுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. 8வது ஊதியக்குழுவின் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும்போது இதன் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும்.
அகவிலைப்படி 3% அதிகரித்ததை தொடர்ந்தது மொத்த அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஊழியர்களின் மாத சம்பளத்தை வெகுவாக உயர்த்தும். நாளுக்கு நாள் அதிகர்க்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் திருத்தம் செய்யப்படுகின்றது. அந்த வகையில் 3% அகவிலைப்படி உயர்வு நிதி ரீதியாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளிக்கும்.
3% டிஏ உயர்வுக்கு பிறகு, அனைத்து ஊழியர்களுக்கும் மாதாந்திர சம்பளம் கணிசமாக உயரும். இந்த ஊதிய உயர்வு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை பொறுத்து வேறுபடும். அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட அகவிலைப்படி அதிகரிப்பின் கணக்கீட்டை இங்கே காணலாம். இருப்பினும், இது தோராயமான மதிப்பீடு என்பதையும், உண்மையான அதிகரிப்பு உண்மையான சம்பளத்தைப் பொறுத்தது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
| அடிப்படை சம்பளம் (ரூபாயில்) | தற்போதுள்ள அகவிலைப்படி (55%) | புதிய அகவிலைப்படி (58%) | மாதாந்திர உயர்வு (ரூபாயில்) |
| 18,000 | 9,900 | 10,440 |
+540 |
| 25,000 | 13,750 | 14,500 | +750 |
| 35,000 | 19,250 | 20,300 | +1,050 |
| 50,000 | 27,500 | 29,000 | +1,500 |
| 1,00,000 | 55,000 | 58,000 | +3,000 |
DA Hike: பணவீக்கத்தில் நிவாரணம் தரும் டிஏ உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுடன் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணமும் 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களின் ஓய்வூதியமும் அதே விகிதத்தில் அதிகரிக்கும். 7வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகால விதியின் படி டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகின்றன. 8வது சம்பளக் குழுவை அமைக்கும் முடிவை அரசாங்கம் ஜனவரி 2025 இல் அறிவித்திருந்தாலும், புதிய ஆணையத்தை நியமித்து, குறிப்பு விதிமுறைகளை (TOR) இறுதி செய்யும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த உயர்வு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு சிறிய நிவாரணத்தை அளித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ