7th Pay Commission DA Hike: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜூலை 2025-க்கான அகவிலைப்படி திருத்தத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த முறை அகவிலைப்படி திருத்தம் சிறப்பம்சம் வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில், 7வது ஊதியககூழுவின் கடைசி திருத்தமாக இது இருக்கும்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு
இந்த முறை, அதாவது ஜூலை 2025 -இல் அகவிலைப்படி (DA) மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2025-ல் அகவிலைப்படி மிகக் குற்யந்த அளவே அதிகரித்தது. அதன் பிறகு, இந்த முறையாவது அகவிலைப்படியில் நல்ல ஏற்றம் இருக்கும் என நம்பப்படுகின்றது.
Salary Hike: ஊதிய உயர்வு
அகவிலைப்படி உயர்வால் வரக்கூடிய சம்பள் உயர்வு கீழ் நிலை ஊழியர்கள் முதல் மூத்த அதிகாரிகள் வரை அனைவருக்கும் பெரிய அளவிலான நிதி நிவாரணத்தை வழங்கும். இந்த முறை அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? இது எப்படி தீர்மானிக்கப்படும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Dearness Allowance: அகவிலைப்படி அதிகரிப்பு
மார்ச் 2025-ல், அகவிலைப்படியில் 2 சதவீதம் மட்டுமே அதிகரிப்பு ஏற்பட்டது. இது கடந்த 78 மாதங்களில் மிகக் குறைவான அதிகரிப்பாகும். இதன் காரணமாக, சுமார் 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. ஜனவரி மாதம் அளிக்கப்பட்ட 2% அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து தற்போது அகவிலைப்படி 55 சதவீதமாக உள்ளது.
இதற்கிடையில் தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் பணியகம் வெளியிட்ட அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) தரவு புதிய நம்பிக்கைகளை எழுப்பியுள்ளது. இதுவரை, ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. ஏப்ரல் மாத தரவுகள் சமீபத்தில் வந்தன. ஏப்ரல் மாத AICPI-IW 0.5 புள்ளிகள் அதிகரித்து 143.5 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, ஜனவரி 2025 இல், AICPI குறியீடு 143.2 ஆக இருந்தது. பிப்ரவரியில் AICPI-IW தரவுகள் 0.4 புள்ளிகள் குறைந்து 142.8 ஆக குறைந்தன. மார்ச் மாதத்தில் அது .2 புள்ளிகள் அதிகரித்து 143.0 ஆக அதிகரித்தது. இப்போது ஏப்ரலில் AICPI குறியீடு 0.5 புள்ளிகள் அதிகரித்து 143.5 ஆக உயர்ந்துள்ளது.
7th Pay Commission: 7வது ஊதியக்குழு
7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 31, 2025 அன்று நிறைவடையும். இதன் காரணமாக இந்த முறை அரசாங்கம் ஊழியர்களை மகிழ்ச்சியடையச் செய்ய அகவிலைப்படியை 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. எனினும், இது குறித்து அரசாங்கத்திடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வரவில்லை.
ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 என்றால், அகவிலைப்படி 2% அதிகரித்து மொத்த டிஏ 57% ஆனால், அகவிலைப்படி தொகை ரூ.10,260 ஆக உயரும். அகவிலைப்படி 58% ஆனால், அகவிலைப்படி தொகை ரூ.10,440 ஆக உயரும்.
DA Hike: டிஏ உயர்வு எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?
CPI-IW தரவுகளின் அடிப்படையில் 12 மாதங்களுக்கான சராசரியில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. இது பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மார்ச் மாதத்தில் ஆண்டு பணவீக்க விகிதம் 2.95 சதவீதமாக இருந்தது, மேலும் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி குறியீட்டையும் பாதித்துள்ளது.
கடந்த சில மாதங்களில், நவம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை, CPI-IW குறியீடு நிலையான சரிவைக் கண்டது. ஆனால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட சிறிய உயர்வு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிம்மதியை அளித்துள்ளது. அகவிலைப்படி என்பது ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல, அவர்களின் நிதிப் பாதுகாப்பையும் பலப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது.
Pension Hike: ஓய்வூதிய உய்ரவு
ஜூலை 2025 இல் அகவிலைப்படியில் 3 முதல் 4 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டால், அது லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதிய உயர்வுக்கு வழிவகுக்கும். இது இவர்களது குடும்பங்களுக்கும் ஒரு பெரிய பரிசாக இருக்கும். ஜூலை நெருங்கி வருவதால், டிஏ உய்ரவு குறித்த ஊழியர்களின் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. ஜூலை மாத அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வழக்கமாக செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க | 8வது ஊதியக்கூழு: 40-50% ஊதிய உயர்வு, ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









