7th Pay Commission: பணவீக்கத்தின் சுமையை எதிர்கொண்டு ஊதிய உயர்வுக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த வாரம் மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்கக்கூடும். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) உயர்வு இந்த வாரம் அறிவிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Dearness Allowance: அகவிலைப்படி அதிகரிப்பு
மத்திய அரசு எப்போது அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கும் என்பதை அறிய மத்திய ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படலாம். முதலில் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக இதற்கான அறிவிப்பு வரும் என நம்பப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. பின்னர், சென்ற வாரம் இதற்கான அறிவிப்பு வரும் என வெகுவாக நம்பப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. எனினும், இந்த வாரம் கண்டிப்பாக அகவிலப்படி பற்றிய நல்ல செய்தியை அரசு அளிக்கும் என வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
DA Arrears: டிஏ அரியர்
ஜனவரி 2025 -க்கான டிஏ உயர்வு பற்றிய அறிவிப்பை இந்த வாரம் அரசு வெளியிட்டால், ஜனவரி முதலான டிஏ அரியர் தொகையும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். அதேபோல, ஓய்வூதியதாரர்களும் அகவிலை நிவாரண அரியர் தொகையை பெறுவார்கள்.
DA Hike: ஆண்டுக்கு 2 முறை டிஏ உயர்வு நடக்கிறது
அரசாங்கம் வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படியை அதிகரிக்கிறது. முதல் அதிகரிப்பு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது, இரண்டாவது அதிகரிப்பு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கத்திலிருந்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் வழங்குவதே இதன் நோக்கமாகும். அக்டோபர் 2024 இல், அரசாங்கம் அகவிலைப்படியை 3% அதிகரித்து. அதன் பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 53% ஆக உயர்ந்தன. இந்த முறை அகவிலைப்படி உயர்வு 2% முதல் 4% வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
Salary Hike, Pension Hike: அகவிலைப்படி 2%, 3% அல்லது 4% அதிகரித்தால், மொத்த அகவிலைப்படி முறையே 55%, 56% அல்லது 57% ஆக அதிகரிக்கும். அதன் பிறகு ஊழியர்களின் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு
அகவிலைப்படி 2% அதிகரித்தால் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 உள்ள ஊழியர்களுக்கு ரூ.360 சம்பள உயர்வு கிடைக்கும்.
அகவிலைப்படி 3% அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி 56% ஆக உயரும், சம்பளம் ரூ.540 அதிகரிக்கும்.
அகவிலைப்படி 4% அதிகரித்தால் அகவிலைப்படி 57% ஐ எட்டும், சம்பளம் ரூ.720 அதிகரிக்கும்.
Pensioners: ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
அகவிலை நிவாரண 2% அதிகரித்தால் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 லிருந்து ரூ.13,950 ஆக அதிகரிக்கும்.
அகவிலை நிவாரண 3% அதிகரித்தால் ஓய்வூதியம் ரூ.14,040 ஆக அதிகரிக்கும்.
அகவிலை நிவாரண 4% அதிகரித்தால் மொத்த ஓய்வூதியம் ரூ.14,130 ஆக உயரும்.
எத்தனை பேர் பயனடைவார்கள்?
இந்த உயர்வு நாடு முழுவதும் 1.2 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதி சுமைக்கு நிவாரணம் அளிப்பதோடு, அவர்களின் வாங்கும் சக்தியையும் அதிகரிக்கும். ஹோலி பண்டிகைக்கு முன்பே அகவிலைப்படி உயர்வு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அரசாங்கம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த வாரம் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இனி அனைவரது கவனமும் உள்ளது. அரசாங்கம் அகவிலைப்படி உயர்வை அறிவித்தால், அது ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு பெரிய பரிசாக இருக்கும்.
மேலும் படிக்க | பரஸ்பர நிதியம்: SIP அல்லது STP முறையில் முதலீடு... இரண்டில் அதிக பலன் கொடுப்பது எது?
மேலும் படிக்க | நாட்டு மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன்: மத்திய அரசின் புதிய மெகா ஓய்வூதிய திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









