7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்று ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைக்கக்கூடும். ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்திற்கான அறிவிப்பு இன்று வரக்கூடும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று குட் நியூஸ்
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவராண அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு இன்று வரலாம் என கூறப்படுகின்றது. இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்திலும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படக்கூடும்.
Cabinet Meeting: அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு
அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி குறித்து முடிவு எடுக்கப்படக்கூடும் என கூறப்படுகின்றது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று அதாவது மார்ச் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அகவிலைப்படியை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம். கடந்த ஆண்டும் மார்ச் மாதத்தில் ஹோலிக்கு முன்பு அரசாங்கம் அகவிலைப்படியை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலிக்கு முன் இந்த பரிசு கிடைக்கக்கூடும்.
DA Hike: டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்?
இந்த முறை அகவிலைப்படி (DA) 2% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 53% -இலிருந்து 55% ஆக அதிகரிக்கும்.
அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்
அரசாங்கம் இன்று அகவிலைப்படியை அதிகரித்தால், அது ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வருவதாக கருதப்படும். மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை அதிகரிக்கிறது. பெரும்பாலும், ஜனவரி மாத டிஏ உயர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் ஹோலி பண்டிகையையொட்டியும் ஜூலை மாத அகவிலைப்படி அதிகரிப்பின் அறிவிப்பு நவராத்திரி பண்டிகையை ஒட்டியும் வெளிவரும்.
DA Arrears: டிஏ அரியர்
அகவிலைப்படி அறிவிப்பு எப்போது வந்தாலும், ஜனவரி 2025 முதலான அகவிலைப்படி அரியர் மற்றும் அகவிலை நிவாரண நிலுவைத் தொகை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.
கடந்த முறை அகவிலைப்படி எவ்வளவு உயர்ந்தது?
கடந்த முறை, ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் வந்தது. அப்போது டிஏ 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அது ஜூலை 1 முதல் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) 50 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக அதிகரித்தது. அதற்கு முன்பு, மார்ச் 2024 இல், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இப்போது அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் 53 சதவீதமாக உள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணமும் (DR) 53 சதவீதமாக உள்ளது.
மேலும் படிக்க | EPF கணக்கில் 2 வங்கிக்கணக்குகளை இணைக்க முடியுமா? முக்கிய அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









