மீண்டும் அகவிலைப்படி அதிகரிப்பு: நாளை முக்கிய அறிவிப்பு? ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்

7th Pay Commission DA Hike: டிஏ உயர்வு ஹோலிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இப்போது இது குறித்த இறுதி முடிவு மார்ச் 19, 2025 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2025, 02:20 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம்
  • ஊழியர்களின் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
  • தொடக்க நிலை ஊழியர்கள் எவ்வளவு நன்மைகளைப் பெறுகிறார்கள்?
மீண்டும் அகவிலைப்படி அதிகரிப்பு: நாளை முக்கிய அறிவிப்பு? ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் பெரிய நிவாரணம் கிடைக்கப் போகிறது. அகவிலைப்படி (DA) அதிகரிப்பிற்காக காத்திருக்கும் 1 கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அரசாங்கம் விரைவில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை (DR) அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு மத்திய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த முடிவு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இப்போது விரைவில் இது குறித்த முடிவு எடுக்கப்படும் என்ற செய்தி வந்துள்ளது.

Add Zee News as a Preferred Source

Cabinet Meeting: அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு

ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு குறித்து நீண்ட காலமாக ஊகங்கள் இருந்து வருகின்றன. முன்னதாக, இது ஹோலிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இப்போது இது குறித்த இறுதி முடிவு மார்ச் 19, 2025 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இந்த கூட்டத்தில் அகவிலைப்படியை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டால், கோடிக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதன் நேரடிப் பலனைப் பெறுவார்கள்.

Dearness Allowance: அகவிலைப்படி 53% லிருந்து 55% ஆக அதிகரிக்க வாய்ப்பு

அரசாங்கம் அகவிலைப்படியை 2% உயர்த்தி அறிவிக்கக்கூடும் என்றும், இது மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை 53% லிருந்து 55% ஆக உயர்த்தும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படி ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. 

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதுயதாரர்களுக்கு பணவீக்கத்திரிலிருந்து நிவாரணம் அளிக்க, ஆண்டுக்கு 2 முறை டிஏ அற்றும் டிஆர் திருத்தப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த அதிகரிப்பு செய்யப்படுகின்றது. 

Salary Hike: ஊழியர்களின் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.1,00,000 என்றால், தற்போதைய 53% அகவிலைப்படியின் கீழ் அவருக்கு அகவிலைப்படியாக ரூ.53,000 கிடைக்கிறது. அகவிலைப்படி 2% அதிகரித்து 55% ஆனால், அவருக்கு அகவிலைப்படியாக ரூ.55,000 கிடைக்கும். அதாவது, ரூ.2,000 ஊதிய உயர்வு இருக்கும்.

Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதிய உயர்வு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது, அதே போல் ஓய்வூதியதாரர்கள் அதை அகவிலை நிவாரணம் (DR) வடிவில் பெறுகிறார்கள். அகவிலைப்படி அதிகரிக்கும்போதெல்லாம் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் அதிகரிக்கின்றது.

தொடக்க நிலை ஊழியர்கள் எவ்வளவு நன்மைகளைப் பெறுகிறார்கள்?

ரூ.18,000 அடிப்படை சம்பளம் பெறும் தொடக்க நிலை ஊழியர்களுக்கும் இதனால் நல்ல பலன் கிடைக்கும். இவர்களுக்கான ஊதிய உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம்.

தற்போது 53% அகவிலைப்படியில் அகவிலைப்படி தொகை: ரூ.9,540
டிஏ 55% ஆக உயர்ந்தால் அகவிலைப்படி தொகை: ரூ.9,900
நேரடிப் பலன்: ரூ.360 அதிகரிப்பு

அகவிலைப்படி உயர்வு 3% ஆக இருந்திருந்தால், மாத அகவிலைப்படி தொகை ரூ.10,080 ஆக அதிகரிக்கும், மாத அதிகரிப்பு ரூ.540 ஆக இருக்கும்.

DA Arrears: டிஏ அரியர் தொகையும் கிடைக்குமா?

அரசாங்கம் அகவிலைப்படி உயர்வை எப்போது அறிவித்தாலும், அது ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும். அதாவது ஊழியர்களுக்கு ஜனவரி முதலான அகவிலைப்படி அரியர் தொகை கிடைக்கும். 

DA Hike: இதற்கு முந்தைய டிஏ உயர்வு எப்போது இருந்தது?

இதற்கு முன்னர் மத்திய அரசு ஜூலை 2024 -இல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) 3% அதிகரித்தது. இதன் பின்னர் அகவிலைப்படி 50% -இலிருந்து 53% ஆக அதிகரித்தது. இந்த முறை டிஏ 2% அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 55% ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் UPS: 50% ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், அகவிலை நிவாரணம்.... ஊழியர்களுக்கு பல பரிசுகள்

மேலும் படிக்க | பெண்களுக்கு LIC வழங்கும் சிறப்பு பரிசு.. மாதம் மாதம் ஆயிரம் கணக்கில் சம்பாதிக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News